1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னமும் அறிவிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியே என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தன்னை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவும், தலைமறைவாக இருப்பவர் என்றும் சென்னை நீதிமன்றம் பிறபித்த உத்தரவை இரத்து செய்யக்கோரி டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி இவவாறு தீர்ப்பளித்துள்ளார்.
1986ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், துப்பாக்கியால் சுட்டு ஒருவரைக் கொன்றது, பலரை காயபடுத்தியது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது ஆகிய பல குற்றப்பிரிவுகளில் டக்ளஸ் தேவானந்தா மீது வழக்கு தொடரப்பட்டு, அவர் நாட்டை விட்டு தப்பிவிட்ட நிலையில், அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்றும், தலைமறைவாக உள்ளவர் என்றும் சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் மன்றம் அறிவித்தது.
இந்த உத்தரவு 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் டெல்லி வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. உடனடியாக நாட்டை விட்டு டக்ளஸ் வெளியேறினார்.
இந்த நிலையில் தன்னை அறிவிக்கப்பட்ட குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, 2006ஆம் ஆண்டில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், அதன்படி, தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் ஒருவரை நீதிமன்றம், அவர் தொடர்பாக ஒரு புதிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆயினும், 1994ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இன்னமும் நடைமுறையில் உள்ளதால், கைது செய்யப்படுவதை தடுக்க, டக்ளஸ் தேவானந்தா உயர் நீதிமன்றத்தை அணுகி பிணைய முன் விடுதலை பெறலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment