சூப்பர் ஸ்டாரின் திரைப்பட வரலாற்றில் ஒரு மயில் கல்லாக அமைந்த திரைப்படம் 'சந்திரமுகி' திரைப்படம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
சந்திரமுகி திரைப்படத்தை பொறுத்த மட்டில் இதன் முன்னோடி மலையாளம் மொழியில் வெளிவந்து அங்கு பரப்பரப்பை ஏற்படுத்திய 'மணிச்சித்திரத்தாள்' திரைப்படம் ஆகும் . பின்னர் இதனை தழுவியே மற்ற இந்திய மொழிகளில் வெளியாகி, வெளியான அனைத்து மொழிகளிலும் பரப்பரப்பை ஏற்படுத்தி வசூல் சாதனை செய்தது.
இந்த திரைப்படத்தில் இறுதி காட்சியே இத்திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு மூல காரணம் என்பதும் நாம் அறிந்ததே. நான் இங்கே உங்களுக்காக 4 மொழிகளில் வெளிவந்த சந்திரமுகியின் இறுதிகாட்சியை உங்களுக்காக பதிவாக போட்டு இருக்கிறேன். இதில் எந்த 'கிளைமாக்ஸ்' உங்களை கவர்கிறது என்று பாருங்கள். என்னை கவர்ந்த 'கிளைமாக்ஸ்'-ஐ இறுதியில் குறிப்பிடுகிறேன் .
'மணிச்சித்திரத்தாள்' ( மலையாளம் ) கிளைமாக்ஸ்
‘ஆப்தமித்ரா’ (கன்னடம்) கிளைமாக்ஸ்
‘பூல் பொலயா’ (பெங்காலி) கிளைமாக்ஸ்
'சந்திரமுகி' (தமிழ்) கிளைமாக்ஸ் (தமிழில் இருந்து தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டதால் இரண்டும் ஒன்றே வீடியோவை போட்டுள்ளேன்)
உண்மையில் என்னை கவர்ந்தது மலையாள மொழியில் வெளிவந்த 'மணிச்சித்திரத்தாள்' கிளைமாக்ஸ் தான் அதில் சோபனாவின் நடனத்தில் இருக்கும் நளினம் மற்ற மொழிகளில் குறைகிறது சோபனாவின் விழிகள் பேசுகிறது, அதில் ஒரு தேடல் இருக்கிறது, அந்த தேடல் அதனை தழுவி வேற்று மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களில் குறைவாக இருக்கிறது என்பது எனது கருத்து.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
No comments:
Post a Comment