விதவிதமான வசதிகள் இணையத்தளம் மூலம் கிடைக்கின்றன. பணப்பரிமாற்றம் முதல் பொருட்கள் வாங்குவது வரை ஆன்லைனிலேயே வந்து விட்டன. இதனை பயன்படுத்தி ரகசிய தகவல்களைத் திருடி, பணம் திருடும் கும்பலும் பெருகி விட்டன. பயர்வால், வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் மூலம் கணினி தாக்குதலில் இருந்து தப்புகிறது. எனினும் நமது பிரவுசரில் உள்ள சிறு சிறு ஓட்டைகளை பயன்படுத்தி 'பக்' என்னும் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பயர்வால் மூலம் யாரும் நமது கணினிக்குள் நுழைய முடியாதபடி செய்யலாம். வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மூலம், வைரஸ் நுழையாமல் பாதுகாக்கலாம்.
ஆனால், நாம் அறிமுகமில்லாத இணையத்தளங்களுக்குள் செல்லும்பொது. அங்கிருந்து நமது கணினியில் நுழையும் ஒற்றன் மென்பொருள்களை நம்மால் கண்டறிய முடிவதில்லை. இதுபோன்ற 'பக்' தாக்குதல்கள் மற்றும் நமது பிரவுசரில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை கண்டறியும் வசதியை வழங்குவதற்கு என்றே ஒரு இணையத்தளம் உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மொசில்லா,ஒபெரா, Safari , Chrome ஆகிய பிரவுசர்களில் உள்ள 14 வகையான பாதுகாப்பு ஓட்டைகள் மற்றும் 'பக்' தாக்குதல்கள் இருந்தால் அவற்றையும் கண்டறிந்து கூறுகிறார்கள்.
அதற்கு நீங்கள் இந்த இணையத்தளத்திற்கு சென்று மொத்தமாகவோ அல்லது தேவையான வசதியை மட்டுமோ தேர்வு செய்து ஒ.கே அளித்தால் போதும். நமது கணினியில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து, அவற்றை சரி செய்வதற்கான வழிமுறைகளையும் கூறுவார்கள். இதனால் இணையத்தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த இந்த வசதி உதவியாக இருக்கும்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
No comments:
Post a Comment