இந்த இணையத்தளத்தை ஆவணங்களின் சுரங்கம் என்றே கூறலாம். சட்ட விவகாரம், தொழில், நிதி, தொழில்நுட்பம், கல்வி, படைப்பாவணங்கள் தொடர்பான 23 மில்லியன்-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் இந்த இணையத்தளத்தில் உள்ளன. இவற்றை நீங்கள் பார்வையிடலாம்; பகிர்ந்துக்கொள்ளலாம். எந்த ஒரு ஆவணத்தையும் குறித்து வைத்துக்கொள்ளலாம், பதிவிறக்கம் செய்யவும் முடியும், டாக், பிடிஎப், எக்ஸ்எல்எஸ், பிபிடி, டிஎக்ஸ்டி ஆவண பார்மட்களில் ஆவணங்கள் அமைந்திருக்கும். நீங்கள் விரும்பும் எந்த ஆவணங்களை வேண்டுமானாலும் 'ஸ்டோர்' செய்துக்கொள்ளலாம்.
அதிகம் பார்க்கப்பட்டவை, அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டவை, புத்தம் புதிது, அதிகம் மதிப்பிடப்பட்டவை, என்ற வரைமுறைகளின் கீழ் பையில்கள் இருக்கும். எந்த ஒரு பொது ஆவணத்தையும் மாதிரிக்காக நீங்கள் 'டவுன்லோடு' செய்துகொள்ளலாம். அத்துடன் நீங்கள் இங்கு 'அப்லோடு' செய்யும் பைல்களை தனிப்பட்டதாக வைத்துக்கொள்ளலாம். அனைவரின் பார்வைக்கும் வைக்கலாம். ஒரு குறிப்பிட்ட பைலை உங்களால் காண முடியவில்லை என்றால், 'டாக்ஸ்டாக்'கின் தேடுதல் வாய்ப்பை பயன்படுத்தலாம். இப்படி பல வசதிகளும் இந்த இணையத்தளம் வழங்குகிறது.
பயனுள்ளபதிவு...நன்றி! நண்பரே....
ReplyDelete