நேற்றைய பதிவில் உங்களது பழைய மென்பொருட்களை கண்டுபிடித்து அதற்கு பதிலாக புதிய மென்பொருளை இலவாமாக பெறுவது எப்படி என்பதை பற்றி தெரிவித்து இருந்தேன். அதை படிக்காதவர்கள் இங்கு செல்லவும் . இன்று நாம் நமது கணினியில் இருக்கும் ஹார்டுவேர் புதியதா அல்லது பழையதா, அது தன்ற்போது எந்த நிலையில் உள்ளது என்பன போன்ற விவரங்களை பெரும் வழியை பார்க்கலாம் அதற்கேன்ரும் ஒரு இணையத்தளம் இருக்கிறது.
சாப்ட்வேர், இணையத்தளத்தில் உலாவும் வைரஸ், ஸ்பாம் போன்ற தாக்குதலில் இருந்து நமது கணினியை காப்பற்றும் என்றால், ஹார்டுவேர் கணினி வேகமாக இயங்குவதற்கு அவசியம். ஹார்டுவேரை மேம்படுத்தி கொள்வதன் மூலம் திடீர் என கணினி நின்று விடுதல், இணையத்தள பக்கங்கள் ஆமை வேகத்தில் திறக்கப்படுதல் போன்றவற்றை தடுக்கலாம். புதிய மென்பொருட்களை பற்றிய விவரங்களை அறிய வென்று இணையத்தளம் உள்ளது போல், ஹார்டுவேர் பற்றிய தகவலை அறிவதற்கும் இணையத்தளம் உள்ளது.
அதற்கு நீங்கள் இந்த இணையத்தளம் சென்று அவர்கள் வழங்கும் இலவச மென்பொருளை டவுன்லோடு செய்தால் போதும். நமது கணினியில் உள்ள ஹார்டுவேர்களின் தற்போதைய நிலை என்ன ? புதியதா? பழையதா? போன்ற முழுத்தகவல்களையும் நாம் பெறலாம். இதன் மூலம் பழைய ஹார்டுவேர்கள் எனில், சம்பந்தப்பட்ட ஹார்டுவேர் நிறுவன இணையத்தளங்களுக்கு சென்று அது தொடர்பான தகவலை பெற்று மாற்றம் செய்யலாம். இதனால் ஆமை வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் உங்கள் கணினியை முயல் வேகத்தில் இயங்க வைக்கலாம்.
பயனுள்ள தகவல்.
ReplyDelete