உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் - த்ரிஷா ஜோடி நடித்திருக்கும் புதிய படம் மன்மதன் அம்பு. அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி போன்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற அக்மார்க் உத்தரவாதத்துடன் திரைக்கு வரத் தயாராகியிருக்கும் மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய பாடல் ஒன்று சர்ச்சைக்குள் சிக்கியது. பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்த பாடல் வரிகளை அமைத்துள்ள கமல்ஹாசன், இந்த பாடலின் மூலம் காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கிறார். கமல்ஹாசனின் இந்த பாடலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததுடன், பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். பெரிய நிறுவத்தின் தயாரிப்பு... பெரிய நடிகரின் படம் என்றெல்லாம் பார்க்காமல் கண்டனக் குரல்கள் எழுந்தன. அதேநேரம் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், மன்மதன் அம்புக்கு யு சான்றிதழ் (சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்ப்பதற்கு ஏற்ற படம்) வழங்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய பாடலலை நீக்க முடியாது என்று கமல்ஹாசன் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். கொச்சியில் நடந்த மன்மதன் அம்பு பிரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பேசினார். அப்போது அவர், மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நீக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த பாடலை நீக்க முடியாது, என்று கூறினார்.
No comments:
Post a Comment