Tuesday, December 21, 2010
காவலனுக்கு தடையில்லை, ஆனால்...!
விஜய் நடித்துள்ள காவலன் படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் மலையாளத்து பாடிகார்ட் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்துள்ள கோகுலம் நிறுவனத்திற்கு ரூ. 1.80 கோடியைக் கொடுத்து விட்டு படத்தை வெளியிடலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் வெளியான படம் பாடிகார்ட். இப்படத்தை சித்திக் இயக்கியிருந்தார். இவர் முன்பு தமிழில் பிரண்ட்ஸ் படத்தை விஜய்யை வைத்துக் கொடுத்து சூப்பர் ஹிட்டாக்கினார். இதையடுத்து மீண்டும் சித்திக்கும், விஜய்யும் இணைந்தனர் பாடிகார்ட் ரீமேக் மூலம்.
இந்தப் படத்துக்கு அடுத்தடுத்து ஏகப்பட்ட தடங்கல்கள். முதலில் படத்தின் தலைப்பு காவல்காரன் என்று வைக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. காவல்காரன் எம்.ஜி.ஆரை வைத்து நாங்கள் இயக்கிய படம். எங்களிடம் கேட்காமல் பெயரைப் பயன்படுத்த முடியாது என்று அது கூறியது. இதையடுத்து படத்தின் பெயரை மாற்றுமாறு தயாரிப்பாளர் கவுன்சில் கூறியது.
இதையடுத்து காவல்காதல் என்று பெயரை மாற்றினார்கள். ஆனால் இந்த டைட்டில் விஜய்க்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து காவலன் என்று மாறியது படத்தின் டைட்டில்.
எல்லாம் முடிந்த நிலையில், படத்துக்கு மிகப் பெரிய சிக்கலாக வந்தது, தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றகுற்றச்சாட்டு. இதில் பல பலமான அரசியல் தலையீடுகள் இருப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்யும் கூட பொங்கலுக்குள் அரசியலுக்கு வந்து விடுவார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இப்படி பல தடைகளைத் தாண்டி காவலன் படம் தியேட்டர்களை எட்டிப் பார்க்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது புதியசிக்கல் முளைத்துள்ளது.
கோகுலம் நிறுவனத்தின் கோபாலன், பாடிகார்ட் படத்தின் கதை உரிமையை வாங்கி வைத்துள்ளாராம்.இதையடுத்து இப்படத்தின் கதையை அப்படியே தமிழில் எடுத்துள்ளனர். எனவே இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட், கோகுலம் கோபாலனுக்கு ரூ.1.80 கோடி பணத்தைக் கொடுத்து விட்டு படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment