கிசுகிசுவை பரப்புவதிலும், அதற்குள் புதைந்து கிடக்கிற உண்மைகளை உணர்ந்து ரசிக்கவும் சில நடிகர் நடிகைகளே கூட தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம். ஆனால் இந்த போதை கலாச்சாரம் சில கலை சூரியன்களை கூட இருட்டாக்கிவிடக் கூடிய அபாயம் இருக்கிறதே என்பதால்தான் இது பற்றி மேலும் மேலும்...
பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் இப்படி எல்லா வுட்டுகளையும், ஒரு கோப்பைக்குள் அடக்கிவிடுகிற சாமர்த்தியம் இந்த பார்ட்டிகளுக்கு இருக்கிறது. ஒவ்வொரு வுட்டிலும் ஒரு குடும்பமோ, அல்லது சில நடிகர்களோதான் இந்த விஷயத்தில் எக்ஸ்பர்ட்களாக இருக்கிறார்கள். சக நடிகர் நடிகைகளை எப்படியோ கவர்ந்து பேசி பார்ட்டிகளுக்கு வரவழைப்பதில் இவர்கள் அசகாய சூர, சூரிகளாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் அடைகிற பலன் என்ன? பார்ட்டிக்கு போகிறவர்கள் அடைகிற பலன் என்ன என்பதையெல்லாம் விவரித்தால் படிக்கிற உங்களுக்கே தலை சுற்றும்.
வாய்ப்பு தேடவும், வசதியை பெருக்கிக் கொள்ளவும், அதிகாரத்தை எட்டிப்பிடிக்கவும் நடத்தப்படுகிற இந்த பார்ட்டி, இப்போது வழி தவறி ஏன் என்றே புரியாமல் போக ஆரம்பித்திருக்கிறது. அதுவும் நாள்தோறும் நாம் புழங்கிக் கொண்டிருக்கிற கோடம்பாக்கத்தில்.
முன்னொரு காலத்தில் பார்ட்டி என்றால் ஒரே ஒரு வீட்டையும் அந்த நட்சத்திர தம்பதியை மட்டுமே சுட்டிக்காட்டுவார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் அடங்கி ஒடுங்கியதும், 'சியர்ஸ்' சொல்ல இடம் தேடி அலைந்தது நட்சத்திரக் கூட்டம். ஈசிஆர் விடுதிகள், பங்களாக்கள் என்று சற்றே நகர்ந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், விமானம் ஏறி வெளி மாநிலங்கள் வரை போக துணிந்தார்கள். இப்போது இவர்களின் தாகத்தை தீர்க்கவே கோடம்பாக்கத்தில் அவதரித்திருக்கிறது ஒரு ஜோடி.
நடிகர் நடிகைளை மிக எளிதாக அணுகிவிடுகிற உத்தியோகம் இவர்களுக்கு. கணவன் மனைவி இருவருமே சினிமா பத்திரிகையாளர்கள். ஆந்திராவிலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கில பத்திரிகையின் தமிழக செய்தி பொறுப்பாளர் அந்த பெண்மணி. இந்த தம்பதிகளின் அழைப்புக்குதான் சொக்கிப் போய் கிடக்கிறார்களாம் நட்சத்திரங்கள். இவர்கள் மாதந்தோறும் வைக்கிற பார்ட்டிக்கு அநேகமாக தொண்ணு£று சதவீத ஸ்டார்கள் விழுந்தடித்து ஓடி வருவதுதான் ஆச்சர்யம். அப்படியென்ன விசேஷம் இந்த பார்ட்டியில்? நம்மிடம் பேசிய அந்த நடிகையே காதோடு காதாக சில விஷயங்களை சொல்ல ஆரம்பித்தார்.
"எலும்பு முறிவுக்கு புத்து£ர் கட்டு எப்படியோ, அப்படிதான் காதல் முறிவுக்கு இந்த தம்பதிகள் ஏற்பாடு செய்யும் பார்ட்டிகள். சமீபத்தில் பிரபுதேவாவும், நயன்தாராவும் பிரியவே துணிந்துவிட்டார்கள். இந்த விரக்தியில் பல காலமாக விளம்பர படங்களில் நடிக்கவே விரும்பாத நயன்தாரா நடிக்கவும் வந்தார். அந்த நேரத்தில்தான் தம்பதிகளின் பார்ட்டி ஏற்பாடானது சென்னையில். வேண்டாம் என்று மறுத்த நயன்தாரா, எதை எதையோ பேசி வரவழைக்கப்பட்டார் பார்ட்டிக்கு. அங்கேதான் மீண்டும் இணைத்து வைக்கப்பட்டார்கள் இருவரும்".
"தம்பதியில் ஒருவர் பணியாற்றும் அந்த ஆந்திர பத்திரிகையே மாதத்திற்கு ஒரு முறை இந்த பார்ட்டிகளுக்கான செலவை ஏற்றுக் கொள்கிறதாம். காரணம், இதில் இடம்பெறுகிற எக்ஸ்க்ளூசிவ் செய்திகளுக்கும், புகைப்படங்களுக்கும் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள் கொடுக்கிற ஒத்துழைப்புக்காக. ஆனால், இதை சாக்காக வைத்துக் கொண்டு தம்பதிகள் நடத்துகிற கோல்மால்கள் சட்டத்திற்கு புறம்பானது" என்றும் கிசுகிசுத்தார் அந்த நடிகை.
முன்பெல்லாம் இரண்டு அல்லது மூன்று லார்ஜ்களோடு நிறுத்திக் கொள்ளும் வம்பு நடிகர், இப்போதெல்லாம் பாக்கெட்டில் தழை து£ள்களோடு திரிகிற அளவுக்கு அவரை 'வளர்த்திருத்திருப்பது' இந்த தம்பதியின் கை வண்ணம்தானாம்.
கடந்த சில தினங்களுக்கு முன் இந்த தம்பதியிடமிருந்து வந்தது ஒரு குறுந்தகவல் அழைப்பு. வழக்கமாக 'வாங்க' என்று அழைக்கும் அவர்கள், இந்த முறை வேறு மாதிரியாக அழைத்தார்களாம். 'இங்கு வந்தால் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லது' என்று. ஏதோ பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்ய அழைப்பது மாதிரி இது என்ன பசப்பு வார்த்தை? அப்படியென்றால் அங்கு என்னதான் நடக்கிறது என்று பொருமினார்களாம் இந்த குறுந்தகவலை படித்த ஒரு சில நடிகைகள். இத்தனைக்கும் இந்த முறை இவர்கள் அழைத்தது பர்த் டே என்ற காரணத்தை வைத்து!
என்றாலும், நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் அந்த நட்சத்திர ஓட்டலை வந்தடைந்தார்கள் முன்னணி நட்சத்திரங்கள். இங்குள்ள ஓட்டலில் சமீபத்தில்தான் புதிதாக ஒரு பிரிவை திறந்திருக்கிறார்கள். ஜனவரி முதல் தேதியன்றுதான் முறைப்படி திறப்பு விழா நடத்த நினைத்திருந்தார்களாம். தங்கள் செல்வாக்கில் அந்த இடத்தை தற்காலிகமாக திறக்க வைத்து ஸ்பெஷலாக அங்கு பார்ட்டி நடத்தியிருக்கிறது இந்த ஜோடி.
முன்னணி நடிகரின் மறைமுக வாரிசு, வம்பு நடிகர், வெள்ளை வெளேர் நடிகை, மூன்றெழுத்து த் நடிகையின் அம்மா, அரசியல் நடிகை, அவரது கணவர், ஆந்திராவிலிருந்தே இதற்காக வந்த அல்லு நடிகர், தம்பி நடிகர் என்று ஏராளமான கூட்டம்.
தம்பதிகள் பார்ட்டி வைக்க மனதில் நினைத்தால் கூட போதும். அடுத்த வினாடியே வந்து நிற்கும் நயன நடிகை மட்டும் கொச்சினில் இருந்தாராம் சம்பவ தினத்தன்று. இங்கு வந்தால் வேறு சில சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால்தான் இந்த ஆப்சென்ட்.
இங்கும் வனிதாவை போன்று ஒரு ஆள் தோன்றாமலா போகும் ....
No comments:
Post a Comment