Wednesday, December 22, 2010
"ரஜினி வீரம் சினிமாவில் தான் அரசியல்னா ரஜினிக்கு பயம் "-சுப்ரமணிய சாமி
நடிகர் ரஜினியின் வீரம் சினிமாவில்தான். அரசியல் என்றால் அவருக்கு பயம், என்றாரா சுப்பிரமணிய சாமி.
எப்போது யாரை வாருவார், யாரைத் தூற்றுவார், யாருடன் சேருவார் என்ற கணிக்க முடியாதவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிவந்தார். இப்போது தலைகீழாக பல்டியடித்து ரஜினியைத் தாக்க ஆரம்பித்துள்ளார்.
வீரகாளியம்மன் கோவிலில் சுப்பிரமணிய சாமி:
இன்று காலை மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழவளவு அருகே உள்ள அடங்கான் கண்மாய்பட்டி வீரகாளியம்மன் கோவிலுக்கு சுப்பிரமணிய சாமி வந்தார். அவரை ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம் வரவேற்றார். கோவிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கு நிருபர்களிடம் பேசிய சாமி, நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கட்சி அல்லாத மாற்று கட்சிகளுடன் ஜனதா கட்சி கூட்டணி அமைக்கும். அதிமுக கூட்டணியில் சேர்வது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என நான் தான் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்தது ஜனதா கட்சி தான். ஆனால் தேவர் பெயரை சூட்ட காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ரஜினி சினிமாவில் மட்டும் தான் வீரம் காட்டுவார்:
எனக்கு பதவி ஆசையில்லை. கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தினால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்.
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment