சென்னைக்கு வந்திருக்கிறார் ராகுல் காந்தி. இளம் தலைவரான இவரது பார்வை தமிழகத்தை கூர்மையாக பார்க்க துவங்கியிருக்கிறது. அதுவும் சினிமா தொடர்பான பிரபலங்களை சந்திக்கிற விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறாராம். விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற அழுத்தமான நம்பிக்கை ஏற்பட்டதே இவர் விஜய்யை சந்தித்த பிறகுதான்! அதன்பின் ராதாரவியும் ராகுலை சந்தித்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த முறை சென்னைக்கு வந்திருக்கும் ராகுலை பிரபல நடிகைகள் சிலர் சந்திக்க முன் அனுமதி பெற்றிருக்கிறார்கள். வெறும் நடிகைகளாக மட்டும் இல்லாமல் சமூக பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிற ரேவதி, ரோஹிணி, சுஹாசினி, மற்றும் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் ஆகியோர்தான் இந்த சந்திப்பில் இடம் பெறப்போகிறவர்கள்.
இந்த சந்திப்பு எது குறித்து என்பதெல்லாம் பின்னர்தான் தெரியவரும் போலிருக்கிறது.
நடிகைகள் அரசியல் வாதிகளை சந்திப்பது தப்பில்லை ஆனால் அவர்கள் அரசியலுக்கு வருவதுதான் தப்பு.
ReplyDeleteசேர்த்து வைத்திருக்கும் பணத்திற்கு ஒரு பதவி வேணும் அவ்வளவுதான் நடிகர்களின் ஆசை மற்றபடி நாட்டை முன்னோக்கி கொண்டு போகணும் ஏழை எளியவருக்கு நல்லதை செய்யணும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது.
நடிகர்களின் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்கக முடியாத இவர்கள் தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைக்கப் போகிறார்கள் ?
முட்டாள்களின்... வாழ்க... என்ற கோஷத்தால் நடிகர்களும் நடிகைகளும் வாழ்கிறார்கள் ஏசி அறையில் இவனது குடும்பமமோ வாழ்கிறது கல்லறையில்.
தமிழர்களை நல்லாத்தான் இந்த பய புள்ள எட போட்டு வெச்சிருக்கு. சினிமா காரர்கள் வந்தா ஓட்டு வாங்கிவிடாம் ன்னு ,
ReplyDeleteஅதுசரி அந்த அம்மா சுகாஷினி என்ன சமூக சேவகியா? என்னையா இப்படி ஊரை கெடுக்க கிளம்ப்பிடீங்க!
டீ.வி. ல வந்துட்டு சினிமா விமர்சனம் பண்ணிட்டு, புருஷன் எடுக்கும் படத்துக்கு வசனம் எழிதிட்டா பெரிய சமூக சேவகமா?