விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, December 20, 2010

    சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறப்பு பார்வை


    டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இந்த மைல்கல்லை தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான செஞ்சுரியன் டெஸ்டில் எட்டினார். கிரிக்கெட்டில் சாதனை மன்னனாக ஜொலிக்கிறார் சச்சின். இவர் களமிறங்கினாலே ஏதாவது ஒரு சாதனை நிகழ்ந்து விடும். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், அதிகம் சதம் அடித்து சாதித்துள்ளார். இவரது சாதனை பயணம் நேற்றும் தொடர்ந்தது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் மிக கவனமாக ஆடிய இவர், டெஸ்ட் போட்டிகளில் தனது 50வது சதத்தை எட்டினார். இரண்டாம் இன்னிங்சில் கேப்டன் தோனியுடன் சேர்ந்து துணிச்சலாக போராடிய இவர் 107 ரன்களுடன் அவுட்டாகாமல் உள்ளார்.


    தொடரும் சாதனை பயணம்...: கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனை பயணம் தொய்வின்றி தொடர்கிறது. நேற்று டெஸ்டில் 50வது சதம் அடித்த இவர், இன்னும் பல மைல்கல்லை கடக்க காத்திருக்கிறார்.கடந்த 1973ல் மும்பையில் பிறந்த சச்சின், இளம் பருவத்திலேயே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். 1988ல் பள்ளி அளவிலான ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் பங்கேற்ற இவர், தனது நண்பர் வினோத் காம்ப்ளி(349)யுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து முதல் சாதனை படைத்தார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து தனது 16வது வயதில் 1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இத்தொடரில் வக்கார் யூனிஸ் உள்ளிட்ட வேகங்கள் வீசிய பவுன்சரில் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்ட போதும், தனது ஆட்டத்தை தொடர்ந்தார். சோதனைகளை கடந்த இவர், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் பாராட்டும் அளவுக்கு சிகரங்களை தொட்டார்.
    சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
     (Sachin Ramesh Thendulkar, பிறப்பு - ஏப்ரல் 24, 1973) தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16ஆவது வயதில்பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே; வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். இதுவரை கிரிக்கெட் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் டெஸ்ட் போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 -இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது. இந்தியாவில் இரண்டாவது உயரிய குடிமுறை விருதான பத்ம விபூஷண்விருதையும் விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதானராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார்.

    வாழ்க்கைக் குறிப்பு

    சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும்வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 17,000 ஓட்டங்களுக்கு மேலும் குவித்த

    வீரராவார்.

    சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும், அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் 37 வயதான இவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள்: 
    * டெஸ்ட் விளையாடும் அனைத்து  நாடுகளுக்கும் எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.
    *
    டெஸ்ட் அரங்கில் அதிக முறை (20) 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் லாரா 19, ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 18 முறை 150 ரன்கள் எடுத்துள்ளனர்.
    *
    டெஸ்ட் அரங்கில் அடித்துள்ள 50 சதத்தில், 28 அயல்நாடுகளிலும், 22 இந்தியாவிலும் எடுத்துள்ளார்.
    *
    இதுவரை 6 இரட்டைசதம் அடித்துள்ள சச்சினின் 50 சதத்தில் 15 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார்.
    *
    ஒருநாள் (46), டெஸ்ட் (50) சேர்த்து 96 சதம் அடித்துள்ளார்

    கிரிக்கெட் வாழ்க்கை

    1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில்(ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்கள் குவித்தார்.

    §                     1994 செப்டம்பர் 9 ல் ஒரு நாள் சர்வதேச போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.
    §                     1996 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்(523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.65 ரன்கள் குவித்தார் சச்சின் அரையிறுதியில்.
    1998 
    §                     ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார்.அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்து கோப்பையை தனி ஒருவராக பெற்றுத் தந்தார்.
    §                     1999ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு அவர் குவித்த 136 ஓட்டங்கள் இன்றும் மறக்கவியலாதது.அப்போட்டியில் கடைசி நான்கு விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.
    §                     1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியை விட்டுக் கொடுத்து இந்தியா வர வேண்டியிருந்தது.பின்னர் மீண்டும் அணியில் திரும்பி கென்யாவிற்கு எதிராக 141* குவித்தார்.அந்த சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.
    §                     2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற காரணமானார்.இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
    §                     2005, டிசம்பர் 10 அன்று கவாஸ்கரின் டெஸ்ட் சதங்கள் (34 ) சாதனையை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.
    §                     2007-2008 ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.
    §                     2008 அக்டோபர்17ல் உலகில் மேற்கு இந்திய தீவு ஆட்டக்காரர் லாராவின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்ட் ஓட்டங்கள் 12273 (நவம்பர் 10, 2008 ன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் .டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை மொத்தம் 40 சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார்.அதிக பட்ச ஓட்டம் 248*.
    §                     ஒரு நாள் போட்டிகளில் 46 சதங்களுடன் 17598 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (ஆகத்து 2010 -இல்). அதிகபட்ச ஓட்டம் 200*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.
    §                     24 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறி சதங்களை கோட்டை விட்டுமிருக்கிறார்.
    §                     ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கேட்ச் பிடிப்பதிலும் சதமடித்துள்ளார், ஒரு நாள் போட்டிகளில் 134, டெஸ்ட் போட்டிகளில் 106. மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின்.
    இத்தனை சாதனைகளின் மத்தியில் சோதனைகள் இல்லாமல் இல்லை.
    §                     இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.
    §                     2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார்.ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது.இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது.இதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு தடையை நீக்கியது.(இந்தியப் பாராளுமன்றம் வரை இந்த சிக்கல் விவாதிக்கப்பட்டது).
    §                     2003 ல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.
    §                     2004 ல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்ததால் சச்சினின் இரட்டை சதம் சாத்தியமில்லாமல் போனது.

    சச்சினின் டெஸ்ட் சதங்கள்


    §                     இதுவரை சச்சின் எடுத்துள்ள 50 சதங்களில் 11 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 20 முறை சமநிலையும் 19 முறை வெற்றியும் அடைந்துள்ளது:
    1. இங்கிலாத்திற்கு எதிராக ஓல்ட் டிரஃபோர்டில், ஆகஸ்ட் 14, 1990, 119* ஓட்டங்கள்(சமநிலை)
    1992
    2. முதல் சதமெடுத்து ஏறக்குறைய இரு வருடங்கள் பின்னரே ஜனவரி 6, 1992 சிட்னி, ஆஸ்திரேலியாவில் இரண்டாவது சதத்தை (148* ஓட்டங்கள்)நிறைவு செய்தார்.(சமநிலை)
    3. பிப்ரவரி 3, 1992, அதே ஆஸ்திரேலிய தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் 114 ஓட்டங்கள் எடுத்தார்.(தோல்வி)
    4. நவம்பர் 28, 1992-தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஜோகனஸ்பெர்க்கின், வாண்டரர்ஸ் மைதானத்தில் 111 ஓட்டங்கள்(சமநிலை)
    இதுவரை எடுத்த நான்கு சதங்களுமே இந்தியாவிற்கு வெளியே ஆடுகையில் எடுத்தவை தான்.
    1993
    5. பிப்ரவரி12, 1993-சென்னை, எம்.ஏ.சி மைதானம், இங்கிலாந்திற்கு எதிராக 165 ஓட்டங்கள்(வெற்றி)
    6. ஜூலை 31,1993-எஸ்.எஸ்.சி மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 104* ஓட்டங்கள்.(வெற்றி)
    1994
    7. ஜனவரி 19, 1994, லக்னோ, இலங்கைக்கு எதிராக, 142 ஓட்டங்கள்(வெற்றி)
    8. டிசம்பர் 2, 1994-நாக்பூர், மே.இ தீவின் அதிவேக பந்துவீச்சிற்கு எதிராக 179 ஓட்டங்கள்(சமநிலை)
    1996
    9. ஜூன் 8,1996-(swing)வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான எட்ஜ்பாஸ்டான் மைதானம்,பிர்மிங்காமில், இங்கிலாந்திற்கு எதிராக 122 ஓட்டங்கள்(தோல்வி)
    10. ஜூலை 5, 1996-ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானம், நாட்டிங்காம், இங்கிலாந்திற்கு எதிராக 177 ஓட்டங்கள்.(சமநிலை)
    1997
    11. ஜனவரி 4, 1997, நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 169 ஓட்டங்கள்(தோல்வி)
    12. ஆகஸ்ட் 3, 1997, பிரேமதாசா மைதானம், கொழும்பு,இலங்கைக்கு எதிராக 143 ஓட்டங்கள்(சமநிலை)
    13. ஆகஸ்ட் 11, 1997, 12 ஆவது சதம் எடுத்த ஒரு வாரத்திற்குள் SSC மைதானம், கொழும்பில் இலங்கைக்கு எதிராக 13 ஆவது சதமெடுத்தார் (139 ஓட்டங்கள்). முதன் முறையாக இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக சச்சின் எடுத்த சதங்கள் இந்த இரண்டும்.(சமநிலை)
    14. டிசம்பர் 4, 1997, வான்கடே மைதானம், மும்பை, இலங்கைக்கு எதிராக 148 ஓட்டங்கள்(சமநிலை)
    1998
    15. மார்ச் 9, 1998, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 155* ஓட்டங்கள்(வெற்றி)
    16. மார்ச் 26, 1998, எம்.சின்னசாமி மைதானம், பெங்களூர், ஆஸிக்கு எதிராக 177 ஓட்டங்கள்(தோல்வி)
    17. டிசம்பர் 29, 1998, வெலிங்டன், நியூசிலாந்திற்கு எதிராக 113 ஓட்டங்கள்(தோல்வி)
    1999
    18. ஜனவரி 31, 1999, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, பாகிஸ்தானிற்கு எதிரான முதல் சதம்,136 ஓட்டங்கள் (தோல்வி)
    முதுகுவலியுடன் சக்லைன் முஷ்டாக்கின் கடுமையான பந்துவீச்சினை சமாளித்து சச்சின் எடுத்த இந்த சதம் பலருக்கு மறக்கவியலாதது. சென்னை ரசிகர்கள் இந்தியாவின் தோல்விக்குப் பின்னரும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    19. பிப்ரவரி 28, 1999, SSC மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 124* ஓட்டங்கள். (சமநிலை)
    20. அக்டோபர் 30, 1999, PCA மைதானம், மொகாலி, நியூசிலாந்திற்கு எதிராக 126* ஓட்டங்கள்(சமநிலை)
    21. அக்டோபர் 30, 1999, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், நியூசிலாந்திற்கு எதிராக 217 ஓட்டங்கள்(முதல் இரட்டை சதம், சமநிலை)
    22. டிசம்பர் 28, 1999. MCG, மெல்போர்ன், ஆஸிக்கு எதிராக 116 ஓட்டங்கள்(தோல்வி)
    2000
    23. நவம்பர் 21, 2000, ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம், டில்லி, சிம்பாப்வேக்கு எதிராக 122 ஓட்டங்கள் (வெற்றி)
    24. நவம்பர் 26, 2000VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 201* ஓட்டங்கள்(சமநிலை)
    2001
    25. மார்ச் 20, 2001, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸிக்கு எதிராக 126 ஓட்டங்கள்(வெற்றி)
    26. நவம்பர் 3, 2001, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 155 ஓட்டங்கள்(தோல்வி)
    27. டிசம்பர் 13, 2001, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், இங்கிலாந்திற்கு எதிராக 103 ஓட்டங்கள்(சமநிலை)
    2002
    28. பிப்ரவரி 24, 2002, VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 176 ஓட்டங்கள்(வெற்றி)
    29. ஏப்ரல் 20, 2002, குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஆஃப் ஸ்பெயின், மே.இ தீவிற்கு எதிராக 117 ஓட்டங்கள் . (வெற்றி) டான் பிராட்மேனின் 29 சதங்களை சமன் செய்த சதம் இது.
    30. ஆகஸ்ட் 23, 2002 லீட்ஸ், இங்கிலாந்திற்கு எதிராக 193 ஓட்டங்கள்(வெற்றி)
    31. நவம்பர் 3, 2002, ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மே.இ.தீவிற்கு எதிராக 176 ஓட்டங்கள். (சமநிலை)
    2003 ல் காயம் காரணமாக அதிக ஆட்டங்கள் ஆடவில்லை
    2004
    32. ஜனவரி 4, 2004, SCG மைதானம், சிட்னி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 241* (சமநிலை)
    33. மார்ச் 29, 2004, முல்தான், பாகிஸ்தானிற்கு எதிராக 194* ஓட்டங்கள் அப்போதைய அணித்தலைவர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு சச்சினை இரட்டை சதம் எடுக்காமல் செய்தது. (வெற்றி)
    34. டிசம்பர் 12, 2004, டாக்கா, பங்களாதேஷிற்கு எதிராக 248* ஓட்டங்கள். இதோடு சுனில் கவாஸ்கரின் உலக சாதனையான 34 சதங்களை சமன் செய்தார். (வெற்றி)
    2005
    35. டிசம்பர் 22, 2005, டெல்லி, இலங்கைக்கு எதிராக 109 ஓட்டங்கள்(வெற்றி) 34 ஆவது சதத்திற்கு பிறகு அடுத்த சதத்தை எடுத்து கவாஸ்கரின் சாதனையை முறியடிப்பதற்கு ஒரு வருடம் ஆகியது சச்சினுக்கு.
    இடையில் பலமுறை தொண்ணூறுகளில் ஆட்டமிழந்தார்
    2006
    2006 ல் ஆடிய ஐந்து டெஸ்ட் ஆட்டத்திலும் சதமேதும் எடுக்கவில்லை. சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற சலசலப்பு ஏற்பட்டது இந்த வருடத்தில் தான்.
    2007
    36. மே 19, 2007, சிட்டகாங்கில் பங்களாதேஷிற்கு எதிராக 101 ஓட்டங்கள். (சமநிலை)
    37. மே 26, 2007, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 122* (வெற்றி)
    2008
    38. ஜனவரி 4, 2008, SCG மைதானம் சிட்னியில் 154* ஓட்டங்கள்(தோல்வி) நடுவர்களின் பல தீர்ப்புகள் சர்ச்சைக்கு உள்ளான ஆட்டம்
    39. ஜனவரி 25, 2008, அடிலைடு ஓவலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 153 ஓட்டங்கள். சர்வதேச அளவில் இது அவருக்கு 80 ஆவது சதம்(ஒருநாள் ஆட்டங்களின் சதங்களும் சேர்த்து) (சமநிலை)
    40. நவம்பர் 6, 2008, நாக்பூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 109 ஓட்டங்கள். லாராவின் உலக சாதனையான 11,000 ஓட்டங்களை சச்சின் கடந்த ஆட்டம் இது(வெற்றி)
    41. டிசம்பர் 15, 2008, சென்னையில் இங்கிலாந்திற்கு எதிராக 103* ஓட்டங்கள்(வெற்றி). மும்பை தாக்குதலுக்கு பின்னர் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் நாடு திரும்பவா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு பின்னர் ஆடிய ஆட்டம் இது.
    இந்தியர்கள் அனைவருக்கும் இந்த சதத்தை சமர்ப்பிப்பதாக சச்சின் தெரிவித்தார்
    2009
    42. மார்ச் 20, 2009, ஹாமில்டனில் நியூசிலாந்திற்கு எதிரான சச்சினின் 160 ஓட்டங்கள்(வெற்றி) 33 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்தில் இந்தியா வெற்றி பெற வழி வகுத்தது
    43. 20 நவம்பர் 2009, அஹ்மதாபாத், இலங்கைக்கு எதிராக 100* ஓட்டங்கள் (சமநிலை)
    2010
    44. ஜனவரி 18, 2010, சிட்டங்காங்கில், பங்களாதேஷிற்கு எதிராக 105* ஓட்டங்கள்(வெற்றி)
    45. ஜனவரி 25, 2010, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 143 ஓட்டங்கள்(வெற்றி)
    46. பிப்ரவரி 9, 2010, நாக்பூரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 100 ஓட்டங்கள் (தோல்வி)
    47. பிப்ரவரி 15, 2010 ஈடன் காடர்ன் மைதானம்,கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 106 ஓட்டங்கள். இந்த வருடத்தில் ஆடிய நான்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்திருக்கிறார் சச்சின். (வெற்றி)
    48. சூலை 28, 2010 - எசு.எசு.சி., கொழும்பு - இலங்கைக்கு எதிராக இரண்டாவது தேர்வுப் போட்டியில் 203 ஓட்டங்கள். (சமநிலை)
    49. அக்டோபர் 12, 2010 - சின்னசாமி அரங்கம், பெங்களூரு - ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது தேர்வுப் போட்டியில் 214 ஓட்டங்கள். (வெற்றி)
    50. டிசம்பர் 19, 2010 - இந்த மைல்கல்லை தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான செஞ்சுரியன் டெஸ்டில் எட்டினார். கிரிக்கெட்டில் சாதனை மன்னனாக ஜொலிக்கிறார் சச்சின்.

    விருதுகள்

    1994 அர்ஜூனா விருது.
    1997-98
    ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.
    1997-
    விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது.
    1999-
    பத்மஷ்ரீ விருது.
    2008-
    பத்மவிபூஷன் விருது.
    §                     உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர் டான் பிராட்மன் சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார்; பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
    §                     1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது வேகப்பந்து வீச்சாளரான மெர்வ் ஹியூஸ் அணித்தலைவரான ஆலன் பார்டரிடம் “இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான்” என்று கூறியிருக்கிறார்.
    §                     ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.

    ஒரு நாள் போட்டியில் இரட்டைச்சதம்


    2010 பிப்ரவரி 24, குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்கள் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.இந்த மகத்தான சாதனை படைக்க சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட பந்துகள் வெறும் 147 மட்டுமே!
    " இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. “20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!" என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். 40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார்.

    சச்சின் டெண்டுல்கர்
    இந்தியா (IND)
    துடுப்பாட்ட வகை
    வலதுகை
    பந்துவீச்சு வகை
    வலதுகை இடச்சுழல்
    வலதுகை வலச்சுழல்
    வலதுகை இடத்திருப்பு
    அணியில் பணி
    மட்டையாளர்

    தேர்வு
    ஒ.ப.து
    ஆட்டங்கள்
    171
    442
    ஓட்டங்கள்
    14240
    17,594
    ஓட்ட சராசரி
    56.96
    45.12
    100கள்/50கள்
    49/58
    46/93
    அதிக ஓட்டங்கள்
    248*
    200*
    பந்துவீச்சுகள்
    3,994
    8,020
    இலக்குகள் (விக்கெட்டுகள்)
    44
    154
    பந்துவீச்சு சராசரி
    52.25
    44.56
    ஆட்டத்தில்
    5
    இலக்குகள்
    0
    2
    ஆட்டத்தில்
    10
    இலக்குகள்
    0
    பொருந்தாது
    சிறந்த பந்துவீச்சு
    3/10
    5/32
    பிடிகள்/
    ஸ்டம்பிங்குகள்
    106/0
    132/0
    இத்தனை சாதனைக்கும் சொந்தக்காரரான சச்சின் மேலும் பல சாதனைகள் படைக்க நமது சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம் .
    ...
    Posted by விழியே பேசு... at 6:31 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: விளையாட்டு செய்திகள்

    1 comment:

    1. Asiya OmarDecember 21, 2010 at 8:52 AM

      சச்சின் பற்றிய தொகுப்பு பகிர்வுக்கு மகிழ்ச்சி.

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ▼  2010 (406)
    • ▼  December (288)
      • 2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் இரண்டு
      • நித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை!- ர...
      • பரபரப்பு வீடியோ காட்சிகள்: நடிகை ரஞ்சிதா விளக்கம்!
      • களவாணி கல்யாணம்... பெற்றோரை சமாதானப்படுத்திய விமல்!
      • இசையுலகிற்கு தற்காலிக டாட்டா -ரஹ்மான் திடீர் முடிவு
      • 1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்-தீவிரவாதிகள் சதி-...
      • 2010ல் உதிர்ந்த திரை மலர்கள்!
      • ஓரங்கட்டப்பட்ட ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
      • காலை வாரி விடாதீர்கள், ப்ளீஸ்-ஜெயலலிதா கெஞ்சல்
      • செல்வராகவன் படத்திலிருந்து விலகியது ஏன்?
      • விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்
      • வடிவேலு மகனை ஹீரோவாக ஆக்க செலவு செய்த நான்கு லட்சம்
      • 2010 டாப் 10௦ பாடல்கள் எனது பார்வையில் பாகம் 1
      • வனிதா விவகாரம் இன்று குடும்ப நல கோர்ட்டில் நடந்தத...
      • சித்து +2 வீடியோ பாடல்கள்
      • அஜித்தின 51வது படம் 'பில்லா 2' புதிய தகவல்
      • 2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் ஒன்று
      • "வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்க மாட்டேன்..." - ஆகாஷ்
      • விஜய்- சீமான் இணைந்து நடிக்கும் 'சட்டம் என்ன செய்ய...
      • இயக்குநர் பாலசந்தருக்கு சர்வதேச ஏ.என்.ஆர்., விருது
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாமி பல்டி
      • நண்பேன்டா... உதயநிதி ஜோடி முடிவானது
      • ' ஆமாம் வானம் பட இயக்குனரை காதலிக்கிறேன்' - அனுஷ்கா
      • நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்த...
      • வனிதாவை கைது செய்தே தீரவேண்டும்! - விஜயகுமார்
      • நான் நிரபராதி நான் நிரபராதி நம்புங்கப்பா... -நித்...
      • பிரபுதேவா - ரமலத் திரைமறைவு பேரத்தில் நடந்தது என்ன?
      • விண்டோஸ் வேகமாக இயங்க
      • இப்படியும் ஒரு தயாரிப்பாளரா....?
      • ஆஸ்ட்ரேலியா இன்னிங்ஸ் தோல்வி; இங்கிலாந்து ஆஷஸ் கோப...
      • வனிதா அரசியலில் குதிக்கிறார்
      • எம்ஜிஆரை இழிவுபடுத்திய வைரமுத்து?
      • நீரா ராடியா சொல்படி அம்பானிக்கு சாதமாய் தீர்ப்பளித...
      • விஜயின் பரிதாப நிலை காவலனுக்கு கிடைத்தது 70 தியேட்...
      • தமன்னாவுக்கு மவுசு குறைந்தது
      • வனிதாவுக்கு பயந்து எங்கும் ஓடி ஒழியவில்லை -அருண் வ...
      • விக்ரம் அமலா பால் இடையே காதல் ....?
      • ஜூலையில் பிரபுதேவா-நயன் திருமணம்
      • நித்தியானந்தா கோவில் பின்வாசல் வழியாக தப்பி ஓட்டம்
      • ரம்லத் - பிரபு தேவாவின் ரூ 30 கோடி விவாகரத்து டீல்...
      • காவலனை வாங்கியது பிரபல டிவி
      • வனிதா-விஜயகுமார் அடிதடி காட்சியின் வீடியோ
      • விண்டோஸ் 7 அற்புத வசதிகள்
      • குழந்தையை கடத்தியதாக விஜயகுமார் மீது வழக்கு -வனிதா
      • 'மன்மதன் அம்பு' நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பாடலின்...
      • மன்மதன் அம்பு வீடியோ பாடல்
      • விக்கிலீக்ஸின் அடுத்த இலக்கு உலக பொருளாதாரமே ஆட்டம...
      • நடிகை ரம்பாவின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்
      • சிம்புவின் வானம் ரிலீஸ் தியதி மாறியது
      • பணம் கொடுத்து சரிகட்டிய பிரபுதேவா விவாகரத்துக்கு ர...
      • அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்-அ...
      • விஜயகுமாருடன் மோதிய வனிதா-விமான நிலையத்தில் அடிதடி
      • சென்னையில் இருக்கும் அருண் விஜய்யை கைது செய்யுங்கள...
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம் -வீடியோ
      • இயக்குநர் மிஷ்கின் மனநேயாளியா..?
      • படமாகிறது மும்பை தாக்குதல் சம்பவம்!
      • ப்ளாங்க் செக்கொடுத்தும் சுயசரிதை எழுத மறுத்த ஐஸ்வர...
      • இந்தியா 2010 - இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
      • கோ படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்களின் பட்...
      • நீரா ராடியா குறித்த பல ரகசியங்கள் வெளியானது...
      • மீண்டும் ரீலிஸ் ஆகிறது தா படம்!
      • ரஜினியின் அடுத்தபடம் பெயர் 'ஜோகய்யா'
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம்
      • தனுஷ் பட பெயர் மாறியது, இசையமைப்பாளரும் மாறினார் !
      • சினிமாவில் இன்று காதல், காதல் தோல்வி தவிர வேறும் இ...
      • கலைஞர் செய்வது அனைத்தும் அயோக்கியத்தனம் - சீமான் (...
      • காங்கிரசுக்கு திமுக இறுதி எச்சரிக்கை ....?
      • விண்டோஸ்-7 தீர்வுகள்
      • ஜெ.வுடன் நெருங்குகிறார் நமீதா!
      • " விஜயகாந்த், 2011ல் தமிழக முதல்வராவார்," புது விள...
      • லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழர் இலங்கைக்கு நாடு...
      • அமலா பால் பந்தா ....
      • திருநங்கை கல்கி நாயகியாக நடிக்கும் 'நர்த்தகி'
      • மலையாளத்திலும் கலக்கப்போகிறார் வடிவேலு
      • சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர துடிக்கும் திரிஷா.
      • தயாநிதி மாறன் செய்தது சரியென்றால் ராசா செய்ததும் ச...
      • மங்காத்தா புதிய தகவல்
      • பல வசதிகளுடன் கூடிய புதிய நோட்பேட்
      • தமிழ் திரையுலகின் முக்கிய நிகழ்வுகள் 2010
      • இயேசு பிறந்த பெத்லகேமில் வரலாறு காணாத கூட்டம்
      • மன்மதன் அம்பு கமல் சிறப்பு பேட்டி - வீடியோ
      • சல்மான் கான் - அசின் ரகசிய திருமணம்...!
      • நீரா ராடியாவுடன் அத்வானிக்கு தொடர்பா? புதிய சர்ச்சை
      • எந்நேரமும் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் உச்சகட்ட ...
      • 'ஸ்பெக்ட்ரம்' ராசாவிடம் 9 மணி நேரம் விசாரணை... இன்...
      • சிறந்த பிரவுசர் தொகுப்பு எது?
      • கிறிஸ்மஸ் விழா ...
      • இயக்குனராகும் கமல் மகள்!
      • ராசாவிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை ...
      • டாஸ்மாக் கடையிலும் கருணாநிதி படம் வைக்க வேண்டும் -...
      • ஐ.நா நிபுணர் குழு இலங்கைவந்தால் நாடுதிரும்ப முடியா...
      • வெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்ட முதல்வரின் மனைவி!
      • இத்தாலியராகவே இருக்கும் சோனியா காந்தி - விக்கிலீக்...
      • அஜித் ரசிகர் மன்ற கலைப்பு மிரட்டல்! பின்னணி இதோ
      • காங்கிரஸ் கட்சியில் சேர ஆசைப்படும் கவர்ச்சி நடிகை!
      • இயக்குநர் செல்வராகவனின் புதிய காதல்
      • சிறந்த படமாக அங்காடித்தெரு தேர்ந்தெடுக்கப்பட்டது.
      • கமல்ஹாசன் தலைமையில் நான்கு பட வெற்றி விழா
      • சந்திரமுகி இரண்டாம் பாகம்... நடிக்க ரஜினி மறுப்பு!
      • மன்மதன் அம்பு... ரஜினி வாழ்த்து!
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.