நடிகை வனிதா - ஆகாஷ் மகன் விஜய் ஸ்ரீஹரியை மீண்டும் ஆஜர்படுத்த, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. இவருக்கும், நடிகர் ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்பது வயதில் ஸ்ரீஹரி மற்றும் மகள் உள்ளனர். வனிதா - ஆகாஷ் இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து ஏற்பட்டது. இதையடுத்து, ஆனந்த்ராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். தன் வசம் இருந்த விஜய் ஸ்ரீஹரியை, ஆகாஷ் பலவந்தமாக கடத்திச் சென்றதாகவும், மகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தன்னிடம் ஒப்படைக்கக் கோரியும், சென்னை ஐகோர்ட்டில் நடிகை வனிதா மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, விஜய் ஸ்ரீஹரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, கடந்த 13ம் தேதி விஜய் ஸ்ரீஹரி ஆஜர்படுத்தப்பட்டான்.
கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் தர்மா ராவ், அரி பரந்தாமன் விசாரணை நடத்தினர். நீதிபதியின் சேம்பரில் விசாரணை நடந்தது. நடிகை வனிதா, நடிகர் ஆகாஷ், விஜய் ஸ்ரீஹரி, ஆகாஷ் தாயாரிடம் ரகசிய விசாரணை நடத்தினர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் இந்த விசாரணை நடந்தது. பின், இவ்வழக்கு நேற்று நீதிபதிகள் தர்மா ராவ், அரி பரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. வனிதா சார்பில் சீனியர் வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு, ஆகாஷ் சார்பில் வக்கீல் இதாயதுல்லா ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், "செகந்திராபாத் கோர்ட் உத்தரவில், வனிதா வசம் மகன் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எந்த உத்தரவின்படி, தற்போது மகனை ஆகாஷ் தன் வசம் எடுத்துள்ளார்? என கேட்டனர். அதற்கு, வக்கீல் இதாயதுல்லா, "குழந்தையின் நலன் முக்கியம் என்றார். உடனே, "குழந்தையின் நலனில் கோர்ட்டுக்கும் அக்கறை உண்டு. இது, "ஹேபியஸ் கார்பஸ் வழக்கு. யாரிடம் குழந்தை இருக்க வேண்டும் என்பதை குடும்ப நல கோர்ட் முடிவு செய்யட்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை நாளைக்கு(இன்று) தள்ளி வைத்த "டிவிஷன் பெஞ்ச், அன்று விஜய் ஸ்ரீஹரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது
No comments:
Post a Comment