Thursday, December 23, 2010
வனிதா பிரச்சினையில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்
நடிகர் ஆகாஷ், அவருக்கும் வனிதாவுக்கும் பிறந்த மூத்த மகன் விஜய்ஸ்ரீஹரியை வனிதாவிடம் இருவாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜயகுமார் அவரது மகள் நடிகை வனிதா இடையே சமீபத்தில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வனிதாவிடம் இருந்த மகன் விஜய்ஸ்ரீஹரியை அவரது முன்னாள் கணவர் ஆகாஷ் அழைத்துச் சென்றார். ஆகாஷிடம் உள்ள மகனை தன்னிடம் ஒப்படைக்க கோரி வனிதா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் விஜய்ஸ்ரீ ஹரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். இதையடுத்து ஆகாஷ் விஜய்ஸ்ரீ ஹரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
பின்னர் அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வனிதா - விஜயகுமார் இடையே ஏற்பட்ட சண்டையால் விஜய்ஸ்ரீ ஹரி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் அவன் என்னுடன் வாழ விரும்புகிறான். வனிதாவுடன் வசிக்கும் ஆனந்தராஜ் விஜய்ஸ்ரீஹரியை கேவலமாக நடத்துகிறார். இதனால் அவன் பெரியவனாகும் வரை என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு கூறினார்கள். அவர்கள் கூறும் போது, முன்னாள் கணவர் ஆகாஷ் 2 வாரத்தில் விஜய்ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் அவன் யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment