ஸ்பைவேர், ஆட்வேர், டிராஜன்ஷ், ஹைஜாக்கர், கீலாக்கர், வார்ம் என நமது கணினியை தாக்கும் ஏராளமான ப்ரோகிராம்கள் ஆன்லையினில் உலா வருகின்றன. தினமும் புதிது புதிதாக இவை உருவாக்கப் படுகின்றன. இவை நமக்கு தெரியாமலேயே நமது கணினியில் நுழைந்து தகவல்களை திருடி அனுப்பி விட்டு, நமது கணினியின் உள்ளேயே சமர்த்தாக அமர்ந்து கொள்ளும் ப்ரோகிராம்கள் ஆகும். புதிதாக ஒரு மென்பொருளை பதிவிறக்கம் செய்யும் போதும், ஆடியோ, வீடியோ பையில்களை ஆன்லைனில் பார்க்கும் போதும், மால்வேர்கள் நமது கணினியில் நுழைந்து விடும்.
கணினி ஹோம்பேஜ் நமக்கு தெரியாமல் மாற்றம் அடைந்து இருந்தாலும், நமது புரவுசரில் புதிதாக டூல்பார் ஒன்று உருவாகி, நாம் அளித்தாலும் போகாமல் அங்கேயே இருந்தாலும், கணினி ஆமை வேகத்தில் இயங்கினாலும், நமது கணினி மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை நாம் அறியலாம். எனவே அதனை கண்டறிந்து மால்வேரை நீக்கினால் மட்டுமே கணினி சிறப்பாக இயங்கும். இதற்கென ஒரு இலவச மென்பொருள் உள்ளது .
பல வகையான மால்வேர் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு, மால்வேர்களை அளித்தல், ஆன்லைன் மூலம் அடிக்கடி அப்டேட் செய்தல், விரும்பிய நேரத்தில் ஸ்கேனிங் என பல வசதிகளை ஸ்பைவேர் டெர்மினேட்டர் (Spyware Terminator) என்னும் இலவச மென்பொருள் அளிக்கிறது. நீங்கள் இந்த இணையத்தளத்திற்கு சென்று அதனை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்.
ஸ்பைவேர்களை அளித்தால், தன்னிச்சையான ஸ்கேனிங், புதிய தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு, ஆன்லைனில் உதவி என ஏராளமான வசதிகளை இந்த மென்பொருள் மூலம் இலவசமாக பெறலாம். இதனுடன் கூடுதலாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருள், இணையத்தளங்களில் நாம் புரவுசிங் செய்யும் பொது பாதுக்காக்கும் வேப்கார்டு (Web guard) மென்பொருள் போன்றவையும் இலவசமாக கிடைக்கின்றன. கணினியை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், இந்த மென்பொருளை தாராளமாக பதிவிறக்கம் செய்யலாம்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
மிக பயணுள்ள தகவல்...
ReplyDeleteநன்றி
பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
ReplyDeleteதொடரட்டும் உங்கள்பணி
வாழ்க வளமுடன்