என் மகனை தனியாக சிறை வைத்து பயமுறுத்தியுள்ளனர் என்று நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர் பேட்டி அளித்துள்ளார். நடிகர் விஜயகுமாருக்கும் அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதாவுக்கு இடையே மகன் ஸ்ரீஹரி யாருடன் இருப்பது என்பது தொடர்பான பிரச்னை விஸ்வரூபமாக வளர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் வனிதாவின் முதல் கணவர் மகன் ஸ்ரீஹரிக்கு உரிமை கொண்டாடியதுடன், கோர்ட் வரை சென்று மகனை அழைத்து சென்றார். இந்த விவகாரம் குறித்து நடிகை வனிதா அளித்துள்ள பேட்டி :-
எனது மகன் விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் மிரட்டி வைத்துள்ளார். என்னை பழிவாங்குவதற்காக எனது தந்தை விஜயகுமார் அவரை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார். விஜய் ஸ்ரீஹரியை தனியாக சிறை வைத்து, எதையோ சொல்லி அவனை பயமுறுத்தியுள்ளனர். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் அவன் மிரண்டுபோய் உள்ளான். என்னுடன் இருந்தபோது மகிழ்ச்சியோடு தங்கைகளுடன் பாசமாக இருப்பான். இப்போது அவர்களை பார்த்தால் விலகி ஓடுகிறான். விஜய் ஸ்ரீஹரி மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான். அவனது திடீர் மாற்றத்தால் எனது 2 பெண் குழந்தைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணா... அண்ணா... என்று அவனது பாசத்துக்காக ஏங்குகிறார்கள். பள்ளிக்கு சென்ற இடத்தில் எனது 2 பெண் குழந்தைகளும் இதுபற்றி ஆசிரியர்களுடன் பேசியுள்ளனர். நீங்களாவது எங்கள் தாத்தாவுடன் பேசி, அண்ணாவை அனுப்பச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
பெற்ற தாய்க்குத்தான் பிள்ளை பாசம் தெரியும். நான் ஆசை ஆசையாய் வளர்த்த எனது மகன், என்னை வெறுக்கும் அளவுக்கு அவனது மனதை மாற்றியுள்ளனர். அவன் மனம் மாறி என்னுடன் மீண்டும் வருவான் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தாயும் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விஜய் ஸ்ரீஹரி இதுநாள்வரை என்னுடன்தான் இருந்தான் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது. இதனை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளேன். எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த தாய்க்கும் ஏற்படக் கூடாது.
இவ்வாறு வனிதா விஜயகுமார் பேட்டியில் கூறியிருக்கிறார்.

No comments:
Post a Comment