இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வருகிற 16&ந் தேதி டர்பனில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக டோனி , சேவாக், சச்சின் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 4 நாட் களுக்கு முன் தென் ஆப்ரிக்கா புறப்பட்டு சென்றனர். செஞ்சூரியன் நகரில் கிரிஸ்டனுக்கு சொந்தமான கிரிக்கெட் அகாடமியில் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை சச்சின் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார். இளம் வேகபந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் சச்சினுக்கு பந்து வீசினார். அப்போது திடீரென பவுன்சராக எகிறிய பந்து சச்சினின் ஹெல்மெட்டை தாக்கியது. இதில் சச்சின் நிலைகுலைந்து தடு மாறினார். தொடர்ந்து அவர் சிறிது நேரம் பயிற்சி செய்வதை நிறுத்தினார். இதுகுறித்து பயிற்சியாளர் கிரிஸ்டன் கூறுகையில், வலை பயிற்சியின் போது இப்படி நடைபெறுவது சகஜம்தான். பயப்படும்படி காயம் எதுவும் இல்லை என்றார்.

ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
No comments:
Post a Comment