இன்று கணினி பயன்படுத்துபவர்கள் அனைவருமே இ மெயில் பயன்படுத்துகிறார்கள் . ஆனால், இ மெயில் பயன்படுத்துபவர்கள் அதிலுள்ள அனைத்து சேவைகளையும் பயன்படுத்துவதில்லை.பிறருக்கு இ மெயில் அனுப்புவது, தனக்கு வந்த இ மெயிலைப் படிப்பது ஆகிய இரண்டு சேவைகளை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.
அது தவிர்த்து எளிதாக பயன்பட கூடிய மூண்டு வசதிகளை பற்றி நாம் பார்ப்போம்.
Signature : என்ற வசதி எல்லா இ மெயில் சேவைகளிலும் உண்டு. ஒருமுறை இதனை உருவாக்கி வைத்தால் போதும். நீங்கள் அனுப்பும் எல்லா இ மெயில்களின் இறுதியில் உங்களது பெயர், பதவி, முகவரி போன்றவற்றை இடம்பெற செய்யலாம். தேவைப்பட்டால் பிறகு சில மாற்றங்களையும் மேற்கொள்ள முடியும். இதனால் ஒவ்வொரு இ மெயிலின் இறுதியிலும் உங்களது பெயர், பதவி, முகவரி மற்றும் உங்களை பற்றிய தகவல்களை டைப் செய்து அனுப்ப தேவை இல்லை.
யாஹூ வழங்கும் இ மெயில் சேவையில் விண்டோவின் வலதுபுற உச்சியில் உள்ள option என்னும் மெனுவில் more option என்ற வசதியை க்ளிக் செய்து signature உருவாக்கலாம். புதிய இமெயில் ஒன்றை டைப் செய்து அனுப்பும் போது, மெயில் விண்டோவின் கீழே இடதுபுறம் இருக்கும் send with my signature என்ற கட்டத்தை தேர்வு செய்து அனுப்ப மறக்க கூடாது. ஜி மெயிலாக இருந்தால் settings மெனுவை தேர்வு செய்து signature உருவாக்கலாம்.
Vacation response : என்ற வசதியையும் இமெயில் நிறுவனங்கள் வழங்குகின்றன. இது மிகவும் முக்கியமான வசதியாகும். நாம் விடுமுறையில் ஊருக்கு செல்லும் போதோ, அல்ல்லது வேறு ஏதாவது அவசர காரணமாக எங்காவது செல்லும் போது நம்மால் இமெயில் படிக்க முடியாமல் போகலாம். அப்போது இந்த வசதியைப் பயன்படுத்தி நமக்கு வரும் இ மெயில்களுக்கு ஆட்டோமெட்டிக்கான பதில்களை அனுப்பலாம். "வணக்கம்! நான் 12 -12-2010 முதல் 25 -12 -2010 வரை நான் ரஜினிகாந்துடன் அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள செல்கிறான் அதனால் நான் வந்ததும் உங்களின் இ மெயிலை படித்து பதிலனுப்புகிறேன்"(சும்மா சொல்லுறது தானே இப்படியும் சொல்லுவோம் ) என்று தயார் செய்து வைக்கலாம் இதனால் நாம் வெளியூர் சென்றிருக்கும் தகவல் இ மெயில் அனுப்பியவரை சென்று சேரும். தேவையற்ற காலதாமதம், கோபம் போன்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
Folder : இந்த வசதியையும் இ மெயில் நிறுவனங்கள் வழங்குகிறது. மெயில் விண்டோவின் இடதுபுறம் இருக்கும் folder என்ற கட்டத்தை க்ளிக் செய்து நமக்கு தேவையான பெயரில் ஒரு folder -ஐ உருவாக்கி கொண்டு நமக்கு வந்திருக்கும் இமெயிலில் நம் எந்த மெயிலை பாதுகாக்க விரும்புகிறோமோ அந்த மெயிலை தேர்வு செய்து கொண்டு மெயில் விண்டோவின் மேல் பகுதியில் இருக்கும் move என்ற கட்டத்தை க்ளிக் செய்யும் போது அங்கே நம் உருவாக்கி வைத்திருக்கும் folder வரும் அதை க்ளிக் செய்தால் நமது மெயில் அந்த folder-ல் சேமிக்க பட்டு விடும். நமக்கு எப்போது தேவையோ, அப்போது அந்த folder- ஐ திறந்து, நாம் சேமித்து வைத்த மெயில்களை பார்த்து கொள்ளலாம். ஒரு folder- ல் ஒன்றுக்கும் அதிகமான மெயில்களை சேமித்து வைக்கலாம், அதை போன்று ஒன்றுக்கு மேற்பட்ட folder- களை உருவாக்கவும் செய்யலாம்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
No comments:
Post a Comment