விக்கிலீக்ஸ் இணையதளம் நிறுவனர லண்டனில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவை அலறவைத்த ஜூலியன் அசேஞ் மீது இருந்த செக்ஸ் குற்றப்புகார் தூசி தட்டி இதனை காரணமாக வைத்து லண்டனில் இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்காவின் தூதரக பரிமாற்றங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் . அமெரிக்கா உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் அமெரிக்க தூதரக அணுகுமுறை மற்றும் கொள்கை ரீதியான பேச்சுக்கள், தலைவர்களின் பட்டப்பெயர்கள், ஈரான்மீது போர் தொடுக்க சவுதி காட்டிய ஆர்வம், ஆப்கன் போர் உள்ளிட்டவை வெளியாகியது. இது அமெரிக்காவுக்கு மட்டுமல்லை உலகிற்கே அச்சுறுத்தலான விஷயம் என அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. மேலும் ஜூலியன் அசேஞ் ஒரு உலக அரசியல் வேடதாரி என்றும் வர்ணிக்கப்பட்டது.
கற்பழிப்ப வழக்கில் சிக்கினார் : இந்நிலையில் ஜூலியன் அசேஞ் பிரிட்டன் போலீசாரால் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசேஞ் (39) மீது கற்பழிப்பு, அத்துமீறி செக்ஸ் தொந்தரவு செய்ததாக சுவீடனில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை காரணமாக காட்டி , பிரிட்டன் போலீசார், ஜூலியனை தற்போது கைது செய்திருக்கின்றனர்.
முன்னதாக ஜூலியன் அசேஞ் வக்கீலிடம் லண்டன் போலீசார் கைது வாரன்டை கொடுத்திருந்தனர். இதனை பெற்ற அவரது வக்கீல் போலீசுக்கு தேவையான ஒத்துழைப்பு கொடுப்போம் என்று கூறியிருந்தார். இது கருத்து மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை இருப்பினும் எங்களுடைய பணியை நிறுத்த மாட்டோம் என்று வி்க்கிலீக்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment