ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் ஒரு மும்பை வாசியோடு தமிழ் நாட்டுக்காரர் கேட்டார்.
எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?
மும்பைவாசி - கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?
தமிழ் நாட்டுகாரர் சிரித்தப்படி சொன்னார் - என்னைப் பார்.
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு உறங்கி விடுவேன்,
போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!
மும்பைவாசி - உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் சிரித்தப்படி கேட்டார் - நான் யார் தெரியுமா ?
தமிழ் நாட்டு குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்
சமைப்பதற்கு கேஸும் அடுப்பும் இலவசம்
பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்,
எதற்காக உழைக்க வேண்டும்?
மும்பைவாசி - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்தப்படி உரைத்தான் தமிழன்.
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25,000ரூபாய் இலவசம்,
1பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்.
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்.
நான் எதற்கு உழைக்க வேண்டும் !!!
வியந்து போனான் மும்பைவாசி!!!
என் உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!!
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?
உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை!!!
உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்!!!
இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்
அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை.
தமிழா விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அளித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு!!!
நாளைய தமிழகம் நம் கையில்,
சிந்தியுங்கள் விழிப்படையுங்கள் சிறப்படையுங்கள்
(இது எனக்கு வந்த ஒரு மெயில் இதில் எழுதப்பட்டது என்னை கவர்ந்ததால் பதிவாக போட்டு இருக்கேன் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் .)
குறிப்பு : : இது எல்லாம் இருக்கட்டும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்துல தமிழ் நாட்டு வாக்காளர்களுக்கு கொடுக்கிறதா இருந்தா ஒரு ஓட்டுக்கு 44,000 ரூபாய் கொடுக்கலாம்னு சொன்னாங்களே அதை எப்ப கொடுபாங்களாம் எங்க வீடுல 10 ஓட்டு இருக்குங்க எப்படியும் 4,40,000 ரூபாய் கிடைக்கும்ல ....
No comments:
Post a Comment