முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு கூட்டம் கூடுவது அவ்வளவு முக்கிய கட்சிக்காரர்கள் கூடுகிற இடம்தான் அது. ஆனால் நேற்று திமுதிமுவென்று செய்தியாளர்களும், டிவி கேமிராமேன்களும் கூடியதால் போயஸ் கார்டனில் ஒரே பரபரப்பு. நடிகர் விஜய் ஜெயலலிதாவை சந்திக்க வருகிறார் என்று ஒரு தகவல் வெளியானதால்தான் இத்தனை கூட்டம்! ஆனால் இரவு வரை வரவேயில்லை விஜய். அப்படி ஒரு திட்டமே இல்லை என்கிறார்கள் விஜய் தரப்பிலிருந்து. என்றாலும் வதந்தியின் பரபரப்பு இன்றும் தொடர்கிற
இதற்கிடையில் விஜய் எங்கள் தொகுதியில்தான் போட்டியிடப் போகிறார் என்று இன்னொரு பரபரப்பை கிளப்பி வருகிறார்கள் புதுக்கோட்டை நகர விஜய் ரசிகர் மன்றத்தினர். (ம்ஹ¨ம், இப்போது அது மக்கள் இயக்கம்) ஏன் இப்படி பேச்சு வர வேண்டும்? வேறொன்றுமில்லை. விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் "நான் புதுக்கோட்டையில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா?" என்றாராம் அந்த ஊர் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களிடம். ஒவ்வொரு முறை விஜய் ரசிகர் மன்ற மீட்டிங் நடக்கும் போதும் இந்த மாவட்டத்து ரசிகர்கள் உருப்படியான கருத்துக்களை முன் வைப்பதும், ஆதாரபூர்வமாக விஜய்க்கு விழப்போகும் ஓட்டுகள் பற்றிய விபரத்தையும் குறிப்பிடுவார்களாம். விஜய்யை பொருத்தவரை இது பக்காவான தொகுதி
ஆனால் எஸ்.ஏ.சி இப்படி கேட்டது எங்களை ஆழம் பார்ப்பதற்காகதான். விஜய்தான் எங்கள் தொகுதியில் நிற்கப் போகிறார் என்கிறார்கள் அவரது ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள். இந்த தொகுதியின் பிரபல திமுக பிரமுகர் ஒருவரும் விஜய் நின்றால் கட்சியிலிருந்து விலகி அவருக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறாராம்.
ஆரம்பம் புதுக்கோட்டை! அடுத்தது, 'அந்த' கோட்டைதான் என்கிறார்கள் ரசிகர்கள்!
முடிவில் திரையுலகமும் கைவிட்டது, அரசியலும் கைவிட்டது என்ற நிலைமை வாராமல் இருந்தால் நல்லது.
விஜய்க்கு ஏன் இந்தப் பேராசை... அப்பேற்பட்ட பழம் பெரும் நடிகர்கள் பலரும் வெந்து சுண்ணாம்பி போன கதை தெரியாதா. விஜயகாந்தே முக்கி முனகிக் கொண்டிருக்கிறார். எதோ பத்துப் படம் ஓடிவிட்டால் முதல்வர் ஆக நினைக்கும் விஜய் நினைத்தலே சிரிப்பு வருது ............. நமக்கே தெரியும் அவர் ஒன்றையும் பிடுங்கப் போவதில்லை என்று ... பிறகென்ன... கொஞ்ச நாளில் சினிமாவிலும் இடமில்லை, அரசியலிலும் வழியில்லை.. எதாவது காலேஜ் கீலேஜ் நடததி பொழைப்ப ஓட்டவேண்டியது தான்........
ReplyDelete