சென்னையில் நேற்று நடந்த வைரமுத்துவின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொள்வதாக இருந்தது. அழைப்பிதழில் பாரதிராஜா பெயர் இடம் பெற்றிருந்தும் அவர் இந்த விழாவை புறக்கணித்துவிட்டார். அவர் நிகழ்ச்சிக்கு வராதது பலவித யூகங்களை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக விசாரித்த நமக்கு கிடைத்த தகவல்கள் சற்றே அதிர்ச்சி ரகம்!
சமீபத்தில் வெளிவந்த 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்கு அறிவிக்கப்படாத பிஆர்ஓ போலவே பணியாற்றினார் வைரமுத்து. இந்த படத்தையும் இயக்குனர் சீனு ராமசாமியையும் பாராட்டுவதாக கருதி கவிஞர் பேசிய சில வார்த்தைகள்தான் பாரதிராஜாவின் கோபத்திற்கு காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அப்படியென்ன சொல்லிவிட்டார் அவர்?
'சீனுராமசாமி இன்னொரு பாரதிராஜா' என்று கூறியிருந்தார். யாராலும் ஒப்பிட முடியாத உயரத்திலிருக்கிற நம்மை ஒரு சாதாரண இயக்குனரோடு ஒப்பிடுவதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லையாம் அவரால். இவ்வளவு சொன்ன பிறகும் அந்த படத்தை பார்க்காமலிருக்க முடியுமா? தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்துவிட்டு வந்த பாரதிராஜா தான் பிறந்த மண்ணின் கதையை இவ்வளவு நேர்த்தியாக ஒரு பிரபலமாகாத டைரக்டர் சொல்லிவிட்டாரே என்று புலம்பிக் கொண்டே இருந்தாராம்.
இவ்வளவு கதையும் இந்த நிகழ்ச்சிக்கு அவர் வர ஒப்புதல் கொடுத்த பின்புதான் நடந்ததாம். இளையராஜா-வைரமுத்து-பாரதிராஜா என்ற முப்பெரும் ராஜாக்கள், சின்ன சின்ன மனஸ்தாபங்களால் குறுநில மன்னர்களாக குறைந்து போனார்களே என்று வருந்துவதை தவிர வேறென்ன செய்ய முடியும் நம்மால்?
அபூர்வமான புகைப்படங்கள். வழங்கியமைக்கு நன்றி.
ReplyDelete