அம்மாவாகிவிட்டார் மீனா. அழகான பெண் குழந்தை! பிறந்த தினம் இருக்கிறதே, அது ரொம்ப ரொம்ப விசேஷம்! 1-1-11...
டெலிவரிக்கு இன்னும் சில நாட்கள் இருக்கிற நிலையில் கடந்த 31 ந் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மீனா. சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டாராம். நார்மல் டெலிவரி என்றால் ஃபேன்சி டேட் அமையாதே என்பதால்தான் இந்த ஆசையாம் மீனாவுக்கு. (போன் நம்பர் வாங்குறது மாதிரி ஆகிடுச்சே பிள்ளை பிறப்பும்?) எது எப்படியோ, தாயும் சேயும் நலம் என்பதுதான் ரசிகர்களுக்கு நிறைவான செய்தி.
இதற்கிடையில் பல படங்களில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவிகா இப்போது நாலு மாத கர்ப்பமாம். இவர் கடைசியாக பா.விஜய்யுடன் ஞாபகங்கள் என்ற படத்தில் நடித்தார். அப்படத்தின் பெரும் தோல்வி சினிமாவிலிருந்தே விலகிப் போக வைத்துவிட்டது அவரை. கணவருடன் பெங்களுரில் வசித்து வரும் ஸ்ரீதேவிகா, இன்னும் சில மாதங்களில் அம்மாவாகப் போகிறார்.
No comments:
Post a Comment