தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், சினிமாவிற்கு தற்காலிகமாக முழுக்கு போட்டுள்ளார் கேப்டன் விஜயகாந்த்.
சினிமாவையும், அரசியலையும் தமது இரண்டு கண்ணாக பார்த்தவர் எம்.ஜி.ஆர். அவரைபோலவே வரவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் களம் புகுந்துள்ளார் விஜயகாந்த். நடிப்பு, அரசியல் என்று இருந்த இவர் மூன்றாவதாக இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த விருதகிரி படத்தில் நாயகனாகவும், இயக்குநராகவும் ஜொலித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி
பெறவில்லை.
பெறவில்லை.
இந்நிலையில் தமது அடுத்தபடத்தையும் இவரே இயக்கப்போவதாக இருந்தது. இதற்கான அறிவிப்பு வெளிவர இருந்தநிலையில் அதனை தள்ளிபோட்டுள்ளார் கேப்டன். இதுகுறித்து விசாரித்தபோது, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தற்காலிகமாக தமது அடுத்தபட படத்திற்கான வேலையை தள்ளிபோட்டதாக
தெரிகிறது.
தெரிகிறது.
தற்போது அரசியலில் தீவிரவமாக இறங்கியுள்ள விஜயகாந்த், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் சேலத்தில் நடந்த மாநாட்டில் தி.மு.க., அரசை தாக்கி பேசினார். மேலும் முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாவம் அவரும் என்ன பண்ணுவாரு சினிமால மார்கெட் குறஞ்சதும் அரசியலுக்கு வந்தாரு. இங்கேயும் நினச்ச மாதிரி இல்ல, சரி நம்ம வச்சு தான் இயக்க ஆளு இல்லையே என்ன பண்ணலாம் ...அதாவது அடி பட்டாலும் படாத மாதிரி நடிக்கணும் இல்லையா! (வடிவேலுகிட்ட கத்துகிடாரு போல) அதனால தானே இயக்குநர் அவதாரம் எடுத்தும் பலனில்லை. இப்போ என்ன பண்ணனும் யோசித்து பார்த்தாரு கவுரவமா யாரும் சந்தேக படாத மாதிரு சாக்கு போக்கு சொல்லிட்டு கிளம்பணும். அதுக்கு தான் இந்த தேர்தல் பளு சாக்கு போக்கு, ரெம்ப தான் நடிக்கிறாரு. ஏன் இந்த நடிப்பை படத்தில காட்ட மாடேன்கிறாங்க....
No comments:
Post a Comment