இலங்கை கடற்படையிடமிருந்து புலிகளின் ஆயுதக்கப்பல் தப்பிச் செல்வதற்கு இலங்கைக் கண்காணிப்புக்குழு (எஸ்.எல்.எம்.எம்.) உதவியிருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு 2003 அக்டோபர் 23 இல் இந்த இரகசிய கேபிளை அனுப்பி வைத்திருக்கிறது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பொறுப்பதிகாரி ஜேம்ஸ்.எவ்.என்ட். விஸ்ரில் இதனை அனுப்பிவைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்திருக்கிறது.
தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகளால் அச்சமயம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கை கண்காணிப்புக்குழுவின்
தலைவராகவிருந்த றைகீவ் ரெலிவ்சீனை அகற்றுமாறு நோர்வே அரசாங்கத்தைக் கோரியிருந்ததாக எம்.விஸ்ரிலின் கேபிள்களில் குறிப்பிடப்பட்டிருந்ததாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
“தனது கடிதத்தில் (நோர்வேக்கு) ஜனாதிபதி,கண்காணிப்புக் குழுவானது வட,கிழக்கு கரைக்கப்பால் இயங்கிய புலிகளின் ஆயுத விநியோகக் கப்பலை கடற்படை இடைமறிப்பதிலிருந்தும் தடுப்பதற்கான செயற்பாட்டை மேற்கொண்டதாக புகார் தெரிவித்திருந்தார். தொலைபேசி அழைப்பின் மூலம் புலிகளுக்கு வேண்டுமென்றே தகவலை வழங்க கண்காணிப்புக்குழு முயற்சித்ததாக ஜனாதிபதி நேரடியாக குற்றஞ்சாட்டியிருந்தார். அதனாலேயே அவர்களின் கப்பல் தப்பிச் செல்லக்கூடியதாக இருந்ததாகவும் அத்துடன், அலட்சியமான போக்கை கண்காணிப்புக்குழு கொண்டிருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். பாதுகாப்பு அமைச்சரால் இந்த விடயம் கண்காணிப்புக்குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அச்சமயம்,அமெரிக்கத் தூதுவராக இருந்தவரிடம் இலங்கை கடற்படையால் புலிகள் தடுத்து நிறுத்தப்படுவதிலிருந்தும் தப்புவதற்கான நிகழ்வுகளுக்கு இடமளித்த விடயங்களை கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஒப்புக்கொண்டிருந்ததாகவும் கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட,கிழக்குக் கரைக்கப்பால் அக்டோபர் 14 இல் இடம்பெற்ற சம்பவம் பற்றி ரெலிவ்சீனுடன் அமெரிக்கத் தூதுவர் கதைத்திருந்தார். (அவரை வெளியேறுமாறு வலியுறுத்தல் விடுக்கப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற உரையாடல்) பாதுகாப்பு அமைச்சரால் தமக்குக் கூறப்பட்டவற்றை ரெலிவ்சீன் உறுதிப்படுத்தியுள்ளார். புலிகளுடன் தொடர்பு கொண்டதன் மூலம் தனது அலுவலகம் தவறிழைத்ததாக ரெலிப்ஸன் ஏற்றுக்கொண்டுள்ளார். வட,கிழக்குக் கரைக்கப்பால் அவர்களின் கப்பல்களில் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கின்றதா என்பது பற்றிக் கேட்டதன் மூலம் தமது அலுவலகம் புலிகளுடன் தொடர்புகொண்டு தவறிழைத்ததாக அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தமது நடவடிக்கையானது புலிகளுக்கு தகவல் வழங்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல என்று ரெலிவ்சீன் நியாயப்படுத்தியுள்ளார்.
இந்த விடயமானது தவறாக கையாளப்பட்டிருப்பதாகவும் உரிய நேரத்தில் கடமையிலிருந்த கண்காணிப்புக்குழு அதிகாரி இந்த விடயத்தைத் தெரிவிக்கத் தவறிவிட்டதாகவும் ரெலிவ்சீன் கூறியுள்ளார். ஓய்வுபெற்ற நோர்வே மேஜர் ஜெனரலான ரெலிப்ஸன் 2003 மார்ச்சில் பிரதான கண்காணிப்பாளராக பதவியேற்றிருந்தார். நோர்வேயின் மற்றொரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ரொன் பியூருஹோவ்டேயின் இடத்துக்கு ரெலிப்சன் நியமிக்கப்பட்டிருந்தார்.
2003 இல் இடம்பெற்ற இச்சம்பவமானது கண்காணிப்புக்குழுவின் தலைவரை அகற்றுமாறு ஜனாதிபதி குமாரதுங்க நோர்வேயை கோருவதற்கு வழிவகுத்தது.ரெலிவ்சீன் தொடர்பாகவும் அவரின் குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை,நோக்கம் குறித்தும் பாரதூரமான சந்தேகங்களைக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் என்று அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது. ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்திலான தேசிய பாதுகாப்புக்குத் தேவைப்படும் விடயங்கள் வினைத்திறனுடன் இருக்க வேண்டியுள்ளது. அத்துடன், நோக்கம் மற்றும் யுத்த நிறுத்தத்தை வினைத்திறனுடன் கண்காணிப்பதற்கான தேவையிருப்பதாகவும் ஆனால், ரெலிவ்சீனின் நடவடிக்கையானது அவருக்கு முன்னர் பதவியிருந்தவர்களுடன் ஒப்பிடுகையில் திருப்தியற்றதாக இருப்பதாகவும் ஜனாதிபதி குமாரதுங்க குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் வலியுறுத்தலுக்கு ஆதரவு அளிக்கும் நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. சகவாழ்வு சூழ்நிலையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. ரெலிப்ஸனை அகற்றுவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகள் சமாதான நடவடிக்கைகளை ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்லுமென ஐ.தே.க. கூட்டணியிலுள்ள உறுப்பினர்கள் எச்சரித்திருந்ததாக பத்திரிகைகள் மேற்கோள்காட்டியிருந்தன.
இந்த விடயத்தை எவ்வளவு தூரத்திற்கு ஜனாதிபதி குமாரதுங்க முன்தள்ள விரும்புகிறார் என்பது நிச்சயமற்றதாக இருப்பதாக என்ட்.விஸ்ரில் கூறியுள்ளார். விடயங்களை அவர் பாரியதாக்கிக் கொண்டிருப்பதாகவும் பின்னர் அவற்றைக் கீழே போட்டுவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரின் தடம்புரண்ட பதிவுகளை எடுத்துக்கொண்டால் தனது அரசியல் தளத்திற்கு புள்ளிகளைச் சேர்த்துக்கொள்வதற்கு இலகுவாக அவர் முயற்சிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வாஷிங்டனுக்கு அனுப்பிய கேபிளில் என்ட்.விஸ்ரில் குறிப்பிட்டுள்ளார் என்று ஏசியன் ரிபியூன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இப்போது புரிகிறதா ...ஏன் சில நாட்களுக்கு முன்னால் விடுதலை புலிகளின் பயன்பாட்டில் இன்னமும் 8 கப்பல்கள் இருக்கிறது'. (அந்த செய்தியை படிக்க இங்கு செல்லவும்) என்று ஏன் இலங்கை ஒத்து கொண்டது என்று. இந்த தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட போகிறது என்பதை புரிந்து கொண்டே இலைகை அப்படி கூறியது. இதை போன்று அவர்களாகவே ஒத்து கொள்ளும் பல உண்மைகள் வெளிவரலாம்....
No comments:
Post a Comment