ஏப்ரலில் வந்து கொண்டிருந்த தமிழ் புத்தாண்டை, ஜனவரிக்கு மாற்றிவிட்டது தமிழக அரசு. பொங்கல் திருநாளான தை முதல் தேதிதான் இனி தமிழர்களின் புத்தாண்டு என்பது முதல்வர் கலைஞரின் உத்தரவு.
இந்த உத்தரவு எந்தளவுக்கு பின்பற்றப் படுகிறது என்பதற்கு பின்வரும் செய்தி ஒரு முக்கிய உதாரணம். பண்டிகை நாளில் தினமும் ஐந்து காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என்று திரையரங்கங்களுக்கு அனுமதி கொடுத்திருந்தது அரசு. அதன்படி போகி தினத்தையே பண்டிகை நாளாக கருதி ஐந்து காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்களாம் தியேட்டர்களில்.
பொங்கல் தினத்திலிருந்துதான் இது நடைமுறைக்கு வரும். எனவே தியேட்டர்களில் காலை 8 மணி ஷோவை ரத்து செய்க என்று திடீர் உத்தரவு வந்ததாம். அப்புறம் என்ன செய்வது? காலை காட்சி கட்! டிக்கெட் விஷயத்திலும் அரசு கெடுபிடி காட்டுவதால் பல தியேட்டர்களில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.
No comments:
Post a Comment