Friday, January 14, 2011
எங்களது கடற்படை தமிழக மீனவரை சுடவில்லை-சொல்கிறார் ராஜபக்சே
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் ராஜபக்சே.
புதுக்கோட்டை மாவட்ட மீனவர் பாண்டியன் என்பவர் இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பலால் சுடப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இதை உணர்ந்த மத்திய அரசு, தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதை மனதில் கொண்டு அவசரம் அவசரமாக இலங்கைத் தூதரை அழைத்து 'அன்பும், கணிவுமாக' கடிந்து கொண்டு விளக்கம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் எங்களது கடற்படைக்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை என்று கூறியுள்ளார் ராஜபக்சே.
கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில், வெளிநாட்டு செய்தியாளர்களை அழைத்து காலை விருந்து வைத்தார் ராஜபக்சே. அப்போது சாப்பிட்டபடியே படு சாவாதனமாக இதுகுறித்து பேசினார் ராஜபக்சே. அப்போது அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் எங்களுக்குத் தொடர்பு இல்லை என்று எங்களது கடற்படை மறுத்துள்ளது. இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் என்னுடன் பேசவில்லை.
தொடக்க கட்ட விசாரணையிலிருந்து எங்களது கடற்படைக்கு இதில் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம், இதுதொடர்பாக விரிவான அறிக்கை தருமாறு கேட்டுள்ளேன்.
சம்பவம் நடந்ததாக கூறப்படுவது இந்திய கடல் பகுதியில். அங்கு எங்களது கடற்படையினர் போக வாய்ப்பே இல்லை. கடல் கண்காணிப்பை நிலத்திலிருந்தபடியேதான் நாங்கள் மேற்கொள்கிறோம் என்றார் ராஜபக்சே.
முன்பு விடுதலைப் புலிகள் தான் சுட்டார்கள் என்று கூறி வந்தது இலங்கை. இப்போது புலிகளை ஒழித்து விட்டோம் என்று இலங்கையே கூறியுள்ளது. எனவே, இப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு யார் காரணம் என்பதை இலங்கை விளக்கவில்லை.
ஆமாங்கடா...பிரபாகரன் வந்து தமிழக மீனவர்களை சுட்டு விட்டு கடலுக்கடியில் பொய் ஒளிந்திரிக்கிறார். அவரை கண்டு பிடித்து அளிப்பதற்கு சர்வ தேச சமுதாயம் எங்களுக்கு பொருளுதவியும் , ராணுவ உதவியும் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கடா ....நீங்க சொல்லுவதை கேட்பதற்கு இங்கே சுயபுத்தி கெட்ட நிறைய அரசியல் கோமாளிகள் இருக்காங்க. நீ கொல்லுடா... மவனே ....! நம்ம எவன்டா கேள்வி கேட்க முடியும் ...நாம யாரு ...சுனாமியிலேயே கொலைப்பண்ணுறவங்களாச்சே.
....
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment