நடிகர் விஜய், நடிகை அசின் நடித்த படம் காவலன். இந்த படத்தை சித்திக் டைரக்டு செய்துள்ளார். ரொமேஷ் பாபு படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இதற்கிடையில் இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம், சர்வதேச விநியோக உரிமை பெற்ற சிங்கப்பூர் படநிறுவனமான சந்திரா எண்டர்பிரைசஸ், விநியோக உரிமை பெற்ற சினிடைம்ஸ் எண்டர் பிரைசஸ் ஆகியவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த படத்தை வெளியிடும் விநியோக உரிமை பெற்ற சக்தி சிதம்பரம், விநியோக உரிமையை ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு விற்றதாக மனுவில் கூறப்பட்டு இருந்தது. மலையாளத்தில் வெளியான “பாடிகாட்” படத்தை விலைக்கு வாங்கிய கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம் படத்தின் இயக்குனர் சித்திக்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்குகளை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். படத்தின் தயாரிப்பாளர் ரொமேஷ்பாபு, வழக்கு தொடர்ந்தவர்கள் கோரியுள்ள (சுமார் ரூ.15 கோடி) ஐகோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் திட்டமிட்டபடி காவலன் படத்தை தயாரிப்பாளரே வெளியிடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment