Wednesday, January 5, 2011
சித்தப்பா கமல் வழியில் தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுஹாஸினி!!
சுஹாஸினிக்கு நீண்ட காலமாகவே தமிழ் ரசிகர்கள் மீது மகா கடுப்பு. மதுரை, நெல்லை சீமையை அடிப்படையாக வைத்து வரும் படங்கள் இந்தப் போடு போடுகின்றனவே... தன் கணவர் அறிவுஜீவிகளுக்காக எடுக்கும் "ஏன், எதுக்கு, என்னாச்சி..." டைப் வசனங்கள் அடங்கிய கலைப் படைப்புகள் கண்டு கொள்ளப்படாமல் போகின்றனவே என்று!
அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக் காட்டவும் செய்வார், வாய்நிறைய புன்னகையோடும் நெஞ்சம் நிறைந்த வஞ்சத்தோடும்.
ஒரு முறை தனது திரை விமர்சன நிகழ்ச்சியில் தமிழ் ரசிகர்களுக்கு படம் பார்க்கத் தெரியவில்லை என்றே குறிப்பிட்டார் (கிராமத்திலிருந்து வரும் இயக்குநர்களுக்கு சீன் எப்படி வைப்பதென்று தெரியவில்லை என்றும் வாரியிருக்கிறார்). அம்மணி எடுத்த முதல் அறிவுஜீவிப் படம் இந்திரா ஒரு கிராமத்துக் கதை என்பது நினைவில்லை போலிருக்கிறது (தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதற்கு மேல் யாரும் கொச்சைப்படுத்த முடியாது எனும் அளவுக்கு ஹை ஸ்டைல் காட்சிகள் அதில்).
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த கவுதம் மேனனின் தயாரிப்பான வெப்பம் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் சுஹாஸினி. இந்தப் படத்தை அஞ்சனா என்ற பெண் இயக்கியுள்ளார். அனால் சுஹாஸினியை சிடி வெளியிடச் சொன்னார்கள். வெளியிட்ட கையோடு அவர் வந்திருக்கலாம். அடுத்து அவர் சொன்னது விஷமத்தனமானது.
"இப்போது தென் தமிழகத்தை மையமாக கொண்ட கதைகளே அதிகமாக வருகின்றன.
ஆனால் மணிரத்னம் போலவே கௌதம் மேனன் நகரத்தை மையமாக கொண்டு படம் எடுப்பவர். மணிரத்னத்திற்கு பிறகு படித்தவர்களுக்காக படம் எடுக்கிறவர் கௌதம் மேனன்தான்", என்றார் சுஹாசினி.
"அப்படியென்றால் மற்றவர்கள் எடுப்பதெல்லாம் பாமரர்களுக்கான படமா... மணி ரத்னம் எடுக்கும் படித்தவர்களுக்கான படத்தை எதற்கு படிக்காதவர்கள் நிரம்பிய கிராமங்களில் திரையிடுகிறார்கள்..." என காரசாரமாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள்.
ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்திய கமலுக்கு கவிஞர் அறிவுமதி கண்டனம்
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
இந்த அம்மா ஒரு குறை குடம் மாதிரி. சல சலவென சத்தம் மட்டும்தான் வரும் . விடுங்க.
ReplyDeleteடி.வி. நிகழ்சிகளில் இந்த அம்மா பண்ணும் கோணங்கி தனங்களை பார்த்தாலே எரிச்சலைத்தான் தரும் . இதில் இவர்கள் என்னவோ "அறிவு ஜீவி "தனமாக அவ்வப்போது உளறிக்கொட்டும். எந்த படைப்பிலும் படித்தவர்களுக்கு, பாமரர்களுக்கு என்ற பாகுபாடே இருக்க முடியாது. இருந்தால் அது படைப்பே அல்ல. என்ற சாதாரண உண்மைகூட இந்த அம்மாவிற்கு புரியாது. மணிரத்தனம், கமல், தற்போது கௌதம் மேனன் இவர்களிதவிர மற்ற எவரும் பாமரர்களாகவே இருக்கட்டும். இவர்களின் படங்களை பார்க்காதவர்கள் கூட பாமரர்களாகவே இருக்கட்டும். என்ன குறைத்து போனது?
சிந்த் பைரவி படத்தில் ஒரு பாடல் காட்சி வரும்.
ReplyDeleteதமிழ் பாடல்களை மேடையில் பாடுவதை கேவலமாக நினைக்கும் பாடகன் தன் காதலியின் உந்துதல் மூலம் தமிழ் பாடல்களை பாட ஆரம்பிக்கிறான்.
கடற்கரையோரம் // மனதில் உறுதி வேண்டும் // பாரதியின் தமிழ் பாட்டை வாய்விட்டு பாடி முடிக்கும் போது அந்த பாடலை கேட்டு ரசிக்கும் ஒரு மீனவ கிழவன் மகிழ்ச்சியில் தன்னிடமிருக்கும் ஒரு சங்கு மாலையை அந்த பாடகனுக்கு பரிசாக அளிப்பான். இது போன்ற காட்சியை வைத்தவர்தான் கே .பாலச்சந்தர். அந்த படத்தில் பாடகனின் காதலியாக நடித்த இந்த அம்மாவிற்கு இதெல்லாம் நினைவில் இருக்காது. "நிறை குடம் தளும்பாது.குறை குடம் கூத்தாடும்."
This comment has been removed by the author.
ReplyDelete@கக்கு - மாணிக்கம்
ReplyDeleteநல்லா இருக்கிறது, நீங்கள் சொன்னன விதம் நல்லா இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் புரிய வில்லை. அறிவுஜீவிகள் என்றால் யார்? இவர்கள் எந்த விதத்தில் அந்த 'லிஸ்டில்' சேருகிறார்கள். நாலு பேரு பாராட்டுவது போல படம் எடுத்தால் அறிவு ஜீவிகளா? அப்படி என்றால் அந்த படத்திலேயே 100 தவறை கண்டு பிடிப்பவன் இவங்களை விடவும் அறிவாளி தானே..?
@கக்கு - மாணிக்கம்
ReplyDeleteஉலகில் அறிவு ஜீவிகள் என்று எந்த முறையில் கணக்கிடப்படுகிறது? ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டு தானே, அப்படி என்றால் உலகம் கொண்டாடும் எந்த அறிவு ஜீவிகளும் முடிவானவர்கள் கிடையாது. அவர்களை விடவும் ஒரு அறிவாளி இருப்பர் எங்காவது ஏன் நாமாக கூட இருக்கலாம் இல்லையா ?(ஆமா, என்று நினைத்து கொள்வோம் என்ன குறைந்து விட போகுது). அதை போன்று தான் பாமரர்களும் .
கமலை எந்த விதத்தில் அறிவு ஜீவியாக எடுத்து கொள்வது இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் நாட்டிலேயே பிழைப்பு நடத்தி கொண்டு மேற்கத்திய நாடுகளின் காலசாரத்தை பின்பற்றி பலதாரங்களோடு வாழும் இவரா அறிவு ஜீவி ?
@விழியே பேசு.
ReplyDeleteஅனைவருமே அவரவர்களின் அறிவால்தான் ஜீவித்திருக்கிறோம். அறிவு ஜீவி என்று தனியாக யாரும் இல்லை.
எந்த கருமாந்திரமோ இந்த வார்த்தை வழக்கு பழக்கத்தில் வந்து விட்டாலும் இந்நாளில் நிறைய மேனா மினிக்கிகள் அது ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் தங்களை பிறரிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட இவ்வாறு கூறிகொள்வார்கள். இந்த அம்மணி சுகாசினிக்கு இந்த காம்ளெக்ஸ் கொஞ்சம் அதிகம்.
இந்த அம்மணி புடவை உடுத்தும் அழகை கேலிபேசாதீர்கள். இவர்தான் நவ நாகரிக பெண்ணாதிக்க நிலையின் ,இயக்கத்தின் தலைவர்.