டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் அழகர் சாமியின் குதிரை. வெண்ணிலா கபடிக்குழு மூலம் இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன், நான் மகான் அல்ல படத்தைத் தொடர்ந்து அழகர் சாமியின் குதிரை படத்தை இயக்கி வருகிறார். வெண்ணிலா கபடிக்குழுவில் க்ளைமாக்ஸ் சரியில்லை; நான் மகான் அல்ல படத்தில் வன்முறை காட்சிள் அதிகம் ஆகிய விமர்சனங்களை சந்தித்த டைரக்டர் சுசீந்திரன், தனது அழகர்சாமியின் குதிரை படத்தில் இதுபோல விமர்சனங்களுக்கு வாய்ப்பே இருக்காது என்கிறார்.
தனது புதிய படம் குறித்து அவர் கூறுகையில், எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் அழகர்சாமியின் குதிரை இருக்கும் என நம்புகிறேன். முன்பாதி நகைச்சுவை, பின் பாதி உணர்ச்சிகளை காட்டும் வகையிலும் காட்சிகள் அமைந்துள்ளன. வெண்ணிலா கபடிக்குழுவில் நடித்த அபு்பு, சரண்யா மோகன் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர 60 புதுமுகங்களையும் நடிக்க வைத்துள்ளோம். இளையராஜா இசையில் காதலுக்கு மரியாதை படப் பாடல்கள் போல பாடல்கள் அருமையாக வந்துள்ளன. பொம்மிநாயக்கன்பட்டி, பெரியகுளம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் படமாக்கியுள்ளோம். குதிரை மீது கேரளாக்களை ஏற்றி பல காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். இந்த மாதிரி படம் மறுபடியும் கிடைக்குமா என்பது தெரியாது. இப்படத்தை இயக்கியதில் மகிழ்ச்சியடைகிறேன், என்றார்.
அழகர்சாமியின் குதிரை படம் ஏப்ரல் மாத விடுமுறையில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்துக்கு பிறகு டைரக்டர் சுசீந்திரன் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். அடுத்தடுத்து பட இயக்கத்தில் பிஸியாக இருக்கும் சுசீந்திரன் விரைவில் அப்பா ஆகப் போகிறார் என்பது கூடுதல் தகவல்..
No comments:
Post a Comment