விருந்தாளியே மாப்பிள்ளை ஆன கதை இதுதான் போலிருக்கிறது. காவலன் படத்தின் வெளியீட்டு நேரத்தில் ஒருவருக்கொருவர் சட்டையை பிடிக்காத குறைதான். நீதிமன்றம் சொன்ன பதினைந்து கோடியை லேப்-ல் கட்ட வேண்டிய சூழ்நிலை. அக்ரிமென்ட்டில் குறிப்பிட்டிருந்த தொகையை விட அதிகமாக கொடுத்தால்தான் படம் ரிலீஸ் ஆகும். அந்த நேரத்தில் சென்னை நகர உரிமையை வாங்கியிருந்த அரசியல்வாதி ஒருவர், என்னால் முடியாது என்று கழன்று கொண்டாராம்.
ஏற்கனவே பண நெருக்கடி. இதில் இவரும் சறுக்கிக் கொண்டாரே என்ற அதிர்ச்சியில் இருந்தார்கள் அத்தனை பேரும். அந்த நேரத்தில்தான் நாங்கள் முன் வருகிறோம் என்று பணத்தை எண்ணி டேபிளில் வைத்தார்களாம் காவலன் படத்தின் டைரக்டர் சித்திக்கும், விஜய்யின் பிஆர்ஓ செல்வகுமாரும். இவர்கள் கொடுத்த சில கோடிகள் போதாது என்ற நிலையில் நானும் சென்னை நகர உரிமையில் பங்கெடுத்துக் கொள்கிறேன் என்று உள்ளே குதித்தாராம் பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
இந்த கூட்டு முயற்சியில்தான் நெருக்கடி நீங்கி படம் வெளிவந்ததாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். எது எப்படியோ சிக்கல் விலகி படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடுவதால் அனைத்து கவலைகளும் சந்தோசமாக மாறியுள்ளதாம்.
Thanks The the people who helped for kavalan
ReplyDelete