புதுமுகமாக ஒரு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலே அந்த நடிகையை கையில் பிடிக்க முடியாது. அதுவும் சூப்பர் ஹிட் படத்தில் நடித்தவரென்றால் சும்மாவா? வீரசேகரன் படத்தில் அறிமுகமானபோது பெரிய அளவில் பேசப்படாத நடிகை அமலா பால், சிந்து சமவெளியில் மாமனாரின் இச்சைக்கு ஒத்துபோகும் கேரக்டரில் நடித்து, மாதர் சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக பிரபலமாகி விட்ட அமலா பால், மைனா என்ற ஹிட் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா பிரபலங்களையும் தன்வசம் கவர்ந்திழுத்து வைத்திருக்கிறார். மைனாவில் அமலாவின் நடிப்பை பார்த்த சீயான் விக்ரம், தனது அடுத்த படத்தில் அமலாவுக்கு சிபாரிசு செய்து ஒப்பந்தமும் போட்டு விட்டார். இந்த நிலையில்தான் புதிய பஞ்சாயத்து ஒன்றில் அமலா பால் சிக்கிக் கொண்டு விழிக்கிறார்.
வழக்கம்போலவே இதுவும் கால்ஷீட் பிரச்னைதான். களவாணி டைரக்டர் சற்குணம் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் அமலா பாலை ஒப்பந்தம் செய்தார். அவர் கேட்ட அட்வான்ஸ் தொகையை கொடுத்த தயாரிப்பாளர் நசீர், ஜனவரி மாதம் முழுவதற்கும் ஒப்பந்தம் செய்திருந்தார். புது வருடம் பிறந்ததும், அம்மணியை தொடர்பு கொண்டு சூட்டிங்கிற்கு வருமாறு அழைத்தால், விக்ரம் படத்தில் பிஸியாக இருப்பதாக தகவல் வந்ததுடன், தனது புதிய மேனேஜரை தொடர்பு கொள்ளும்படி சொல்லியிருக்கிறார். மேனேஜரை தொடர்பு கொண்டால், ஆகஸ்ட் வரை மேடம் பிஸி என்றிருக்கிறார்.
இந்த கால்ஷீட் குழப்பத்துக்கு காரணம் விக்ரம் பேச்சைக் கேட்டு அமலா பால் தனது மேனேஜரை மாற்றியதுதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். பழைய மேனேஜர் சற்குணத்திற்கு கால்ஷீட் வழங்கியிருக்கிறார். புதிய மேனேஜர் விக்ரம் உள்ளிட்ட சிலருக்கு ஆகஸ்ட் மாதம் வரை கால்ஷீட் வழங்கி அட்வான்ஸ்களை வாங்கிக் குவித்திருக்கிறார். இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து தொடங்கியிருக்கிறது.

No comments:
Post a Comment