""நான் அப்பாவுடன் தான் செல்வேன், என, வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி கூறினான்.
நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவிற்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப சண்டை தற்போது, வனிதாவிற்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் இடையிலான உரிமைப் போராட்டமாக வெடித்துள்ளது. வனிதாவிற்கும், ஆகாஷுக்கும் பிறந்த முதல் மகனான விஜய் ஸ்ரீஹரி யாரிடம் இருப்பது என்பது தான் தற்போதைய பிரச்னை. இருவரும், தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று சண்டையிட, பிரச்னை மீண்டும் கோர்ட்டிற்கு சென்றது.
ஐகோர்ட்டில், விஜய் ஸ்ரீஹரியை 15 நாட்களுக்குள், வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், மகன் விஜய் ஸ்ரீஹரியை ஐதராபாத்திற்கு ஆகாஷ் அழைத்து சென்றார். அங்கிருந்து விஜய் ஸ்ரீஹரி, சென்னை விமான நிலையத்திற்கு தாத்தா விஜயகுமாருடன் வந்திறங்க, அங்கு வனிதாவும் ஆஜராக நிலைமை களேபரமானது. தொடர்ந்து, மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என, வனிதா போலீசை நாடினார். மகன் தன்னிடம் இருப்பதே நல்லது என்று ஆகாஷும் தன் பங்கிற்கு சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார். விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க நாளையே கடைசி நாள் என்பதால், ஆகாஷ் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
இதற்கிடையில், பத்திரிகையாளர்களை சந்தித்த ஆகாஷின் தாய் மகேஷ்வரி கூறுகையில், "ஸ்ரீஹரியின் எதிர்காலம் பற்றிய கவலை எங்களுக்கு அதிகம் உள்ளது. என் பையனின் வாழ்க்கை தான் வீணாகி விட்டது; பேரனின் வாழ்க்கையும் அதேபோல் ஆகிவிடக் கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். ஸ்ரீஹரி அப்பாவுடன் தானே இருக்கிறான்; அவர்கள் வந்து பார்த்து கொள்ளலாமே? தீர்ப்பு இரண்டு நாட்களில் வருவதால், என் மகன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளான் என்றார்.
வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி கூறியதாவது: நான் அப்பாவுடன் தான் இருப்பேன்; அம்மாவுடன் போக விருப்பமில்லை; அவர்கள் என்னை துன்புறுத்துகின்றனர். "ஸ்டெப் பாதர் (வனிதாவின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜன்) மது அருந்தும் போது, என்னை ஐஸ்கட்டி எடுத்து போட சொல்லுவார். முடியாது என்றால் முழங்கால் போட சொல்லி தண்டிப்பார். இதை என் அம்மா தட்டிக் கேட்க மாட்டார். அவருக்கு ஏற்கனவே நியூயார்க்கில் மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள் போல் நான் இல்லை என்று அடிக்கடி திட்டுவார். இருவரும் சேர்ந்து என்னை, "டார்ச்சர் செய்கின்றனர். என்னை அப்பாவே நன்றாக பார்த்து கொள்கிறார். கோர்ட்டில் அம்மாவுடன் போக சொன்னாலும் நான் போக மாட்டேன். அழுது, அடம் பிடித்து அப்பாவுடன் தான் போவேன். இவ்வாறு விஜய் ஸ்ரீஹரி கூறினான்.

No comments:
Post a Comment