தமிழ்சினிமாவை மதுரை மண்தான் ஆண்டு கொண்டிருக்கிறது என்று ஒரு விழாவில் கூறினார் அமீர். அவர் சொன்னது சரியா, தவறா என்ற பட்டிமன்றம் இப்போது தேவையில்லை. ஆனால் பெருகி வரும் மதுரை பின்னணி கதைகள் இன்னமும் அதே வேகத்தோடுதான் வந்து கொண்டிருக்கின்றன. அதில் லேட்டஸ்ட் அட்ராக்ஷன் ஆடுகளம்.
இந்த கதை உருவான அதே மதுரை மண்ணில்தான் இப்படத்தை கண்டுகளிக்க வேண்டும் என்று நினைத்தாராம் ஆடுகளம் நாயகன் தனுஷ். இதற்காக மதுரை புறப்பட்டு சென்றிருக்கிறார் அவர். அங்குள்ள சில தியேட்டர்களில் அடுத்தடுத்த காட்சிகளை தொடர்ந்து பார்க்க திட்டமிட்டிருக்கிறாராம். இவருடன் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜும் சென்றிருக்கிறார்.
ஆடுகளத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் நடிகர் கிஷோர். பொல்லாதவனிலும் இவருக்கு முக்கியமான வேடம் கொடுத்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் முதல் படத்தில் சொந்தக் குரலில் பேச வைத்தவர், இந்த படத்தில் கிஷோருக்கு சமுத்திரக்கனியை டப்பிங் கொடுக்க வைத்திருக்கிறார். ஏனுங்க...
No comments:
Post a Comment