கடந்த ஆண்டு சாதனை படைத்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழாவை வி4 எண்டர்டெய்னர் நிறுவனம் நடத்தியது. சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் இந்த விழா நடந்தது.
தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன், பட அதிபர்கள் கே.ஆர்.ஜி., இப்ராகிம் ராவுத்தர், நடிகர் கே.ராஜன், நடிகைகள் தேவயானி, லிசி ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விருதை நடிகர் கார்த்திக் பெற்றார். பார்த்திபனும், சுகாசினியும் இணைந்து இவ்விருதை அவருக்கு வழங்கினார்கள். நடிகர்திலகம் சிவாஜி கணேசன் விருது நடிகர் பிரபுவுக்கு வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் விருது ராதாரவிக்கும், கலைவித்தகர் விருது பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கும் வழங்கப்பட்டன. எந்திரன், சிங்கம், நான் மகான் அல்ல, அங்காடி தெரு, மதராசபட்டினம், பையா, மைனா ஆகிய படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இயக்குனருக்கான விருதை வசந்தபாலன், விஜய், கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, பிரபுசாலமன், சமுத்திரக்கனி ஆகியோர் பெற்றனர்.
சிறந்த அறிமுக டைரக்டர்கள் களவாணி சற்குணம், பலேபாண்டியா சித்தார்த், நானே என்னுள் இல்லை ஜெயசித்ரா ஆகியோர் பெற்றனர். சிறந்த கதாசிரியருக்கான விருது பாண்டி ராஜுக்கும், திரைக்கதையாசிரியர் விருது பாக்யராஜுக்கும், வசனகர்த்தா விருது சுகா சினிக்கும் வழங்கப்பட்டன. சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். சிறந்த நடிகர் விருதை ஜெயம்ரவி, ஆதி, ஸ்ரீகாந்த், அருண்விஜய், கிருஷ்ணா ஆகியோர் பெற்றனர்.
காமெடி நடிகர்கள் விருது வடிவேலு, விவேக் ஆகியோருக்கும், குணசித்திர விருது சரண்யாவுக்கும், வில்லன் நடிகர் விருது ஏ.எல்.அழகப்பனுக்கும் வழங்கப்பட்டன. அறிமுக நடிகர்கள் கவுதமன், விதார்த், அமரேஷ் கணேஷ், அதர்வா, ஹரீஸ, கல்யாண், பெரோஸ்கான், மகேஷ், ஏ.வெங்கடேஷ், பஞ்சுசுப்பு, அறிமுக நடிகைகள் அமலாபால், தன்ஷிகா, அருந்ததி, போர்பிரேம், கல்யாணம் ஆகியோரும் விருதுகள் பெற்றனர்.
விழா ஏற்பாடுகளை வி4 எண்டர்டெய்ன்மெண்ட் டைமண்ட்பாபு, சிங்கார வேலு, மவுனம் ரவி, ரியாஸ் அகமது ஆகியோர் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment