நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜி.வி. மஹாலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை மோனிகா பள்ளிபாளையத்திற்கு வந்தார்.
அப்போது நிருபரிடம் அவர் கூறியதாவது:-
பள்ளிபாளையம் பகுதிக்கு சிறு வயதில் அடிக்கடி வருவேன். இப்போது பள்ளிபாளையம் ஊரே மாறிவிட்டது. அந்த அளவிற்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனது சொந்த ஊர் அருகில் உள்ள கவுந்தம்பாடிதான். நான் சிறு வயதில் இருந்து நடித்து வருகிறேன்.
இயக்குனர் பாக்கியராஜ்தான் அவரச போலீஸ் படத்தில் அறிமுகப்படுத்தினார். இதுவரை 35 படத்தில் நடித்துவிட்டேன். எனக்கு அழகி படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்பட்டது.
தமிழக மக்களிடம் நிரந்தர இடம் அழகி படத்தின் மூலம் கிடைத்தது. தற்போது இயக்குனர் ராசுமாதவனின் முத்துக்கு முத்தாக படத்தில் முற்றிலும் மாறுபட்ட கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன்.
இந்த படமும் எனக்கு திருப்பு முனையாக அமையும். பொது சேவையில் ஈடுபட்டு வருகிறேன். எதிர்காலத்தில் பொது சேவையில் தீவிரமாக ஈடுபடுவேன்.
காய்கறிகள், மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அரசுதான் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 வருடங்களுக்கு பிறகுதான் திருமணத்தை பற்றி நினைப்பேன்.
பெற்றோர் விருப்பப்படிதான் திருமணம் நடைபெறும். தற்போது கன்னட படத்திலும் நடித்து வருகிறேன். இவ்வாறு மோனிகா கூறினார்
No comments:
Post a Comment