வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா... உன்ன வெயிலுக்குக் காட்டாம வளத்தாய்ங்களா’ - இதுதான் இப்போது செம கேட்ச்சிங்கான ரிங்டோன். 'ஆடுகளம்’ படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக, இளசுகளின் மனதில் டாப் அடித்துவிட்டார் டாப்ஸி.
''மாடலிங்கில்தான் பொது வாழ்க்கை ஆரம்பம். லைஃப்ல ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு ஆசை. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறதே கஷ்டமான வேலை. ஆனா, படிக்கும்போதே எக்ஸ்ட்ராவா எதாவது செய்யணும்னு நினைச்சேன். மாடலிங்கில் குதிச்சேன். 2008 ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் 'ஃப்ரெஷ் ஃபேஸ்’ மற்றும் 'ப்யூட்டிஃபுல் ஸ்கின்’ பட்டங்கள் வாங்கினேன். அப்புறம், ஏர்டெல், ரிலையன்ஸ், கோகோ கோலா, டாடா டோகோமோனு ஏகப்பட்ட விளம்பரப் படங்கள் நடிக்க ஆரம்பிச்சேன்!''
'' 'ஆடுகளம்’ வாய்ப்பு எப்படி வந்தது?''
''என்னுடைய ஆல்பம் பார்த்துட்டு வெற்றிமாறன் கூப்பிட்டார். அது வரைக்கும் தனுஷ், வெற்றிமாறனைப் பத்தி ஒரு வரிகூட எனக்குத் தெரியாது. அப்புறம்தான் தனுஷ், ரஜினி சாரின் மாப் பிள்ளைனு தெரியும். மதுரைக்கு ஷூட்டிங் வந்தபோதுதான், 'இது எவ்ளோ பெரிய டீம், எவ்ளோ பெரிய படம்’னு
தெரிஞ்சது. எனக்கு செம கேரக்டர்.
தெரிஞ்சது. எனக்கு செம கேரக்டர்.
ஆங்கிலோ இந்தியன் பொண்ணா நடிச்சது பிரமாதமான அனுபவம். அதுவும் மதுரை... வாவ்! எவ்ளோ லைவ்லியான ஊர் தெரியுமா! கலகலன்னு ஊரே ஒரு காமெடி சேனல் மாதிரி இருக்கு. ரொம்ப அன்பான மனுஷங்க!''
''ஆங்கிலோ இந்தியப் பெண் கேரக்டரில் எப்படி செட் ஆனீங்க?''
''டெல்லியில் ஆங்கிலோ இண்டியன்ஸ் ரொம்பக் குறைவு. அவங்ககூட நான் பழகினது இல்லை. இங்கே ஷூட்டிங் வந்தப்பதான், முதல்முறையா அவங்களைப் பார்த்தேன். என்கூட படத்தில் நடிச்சிருக்கிற முழுக் குடும்பமும் மதுரையில் நிஜமாவே வாழ்கிற ஆங்கிலோ இந்தியக் குடும்பம். அவங்ககூடவே இருந்ததால், நானும் அவங்களை மாதிரியே மாறிட்டேன். இதுதான் தொழில் ரகசியம்!''
''அமிதாப் பச்சனுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துட்டீங்கன்னு ஒரு நியூஸ் வந்ததே?''
''உண்மைதான். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'புத்தா’ என்கிற படத்தில் அமிதாப்போடு நடிக்க வாய்ப்பு வந்தது. தெலுங்கில் மூன்று படங்கள், தமிழில் ஒண்ணு, மலையாளத்தில் ஒண்ணுன்னு அஞ்சு படங்கள் கமிட் பண்ணிட்டேன். ஏப்ரல் வரை டாப்ஸி ரொம்ப பிஸி. அதனால், என்னால் 'புத்தா’ படத்துக்கு டேட்ஸ் கொடுக்க முடியலை. அமிதாப்ஜியோடு நடிக்க முடியாமப் போனதில் கொஞ்சம் வருத்தம்தான்!''
''இவ்ளோ ஸ்லிம்மா இருக்கீங்களே... உங்க ஃபிட்னெஸ் ரகசியம் என்ன?''
''என்னைக் கலாய்க்கிறீங்களா? நான், பசி எடுத்தா மட்டும் சாப்பிடுவேன். அதுவும், அளவா சாப்பிடுவேன். நிறையத் தண்ணீர் குடிப்பேன். பசங்களோட அதிகமாப் பேச மாட்டேன். அவ்ளோ தான்!''
No comments:
Post a Comment