மும்பையில் இருந்தாலும் தினம் தினம் ஆடுகளம் படத்தை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. இந்த படத்தில் டாப்ஸி நடித்திருக்கும் கேரக்டரில் முதலில் நடித்தவர் இவர்தான். சுமார் 20 நாட்கள் இவரை நடிக்க வைத்த வெற்றி மாறன், அப்புறம் ஏனோ வீட்டுக்கு அனுப்பி விட்டார். அந்த அக்கறையில்தான் இந்த விசாரிப்பாம்.
இப்போதெல்லாம் ஸ்ரேயாவின் மனசு நல்ல படங்களுக்கு ஏங்குகிறது என்பதுதான் நல்ல செய்தி. யார் கால்ஷீட் கேட்டு போனாலும் முழு கதையையும் கேட்கிறார். முடிந்தவரை கதையில் இருக்கிற லாஜிக்குகளை அலசுகிறார். கடைசியில் மொழி மாதிரி ஒரு சப்ஜெக்ட் சொல்லுங்க. சும்மாவே கூட நடிக்கிறேன் என்கிறாராம்.
இதுவரைக்கும் பணத்துக்காக நடிச்சாச்சு. இனிமேல் பணம் அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை. நல்ல நடிகைன்னு பேர் வாங்கணும் என்று கதை சொல்ல போனவர்களின் மயிர் சிலிர்க்கும்படி பேசுகிறாராம். இதே பதிலைதான் என்னை நடிக்க அழைக்கும் எல்லா மொழி டைரக்டர்களுக்கும் சொல்கிறேன் என்கிறாராம்.
ஸ்ரேயாவின் இந்த திடீர் மாற்றம், கிளாமர் விரும்பிகளுக்கு ஏமாற்றம்தான்!
No comments:
Post a Comment