நடிகர் கமல்ஹாசன் 21 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கப் போகிறார். கமல்ஹாசன், மாதவன், த்ரிஷா, சங்கீதா நடித்த மன்மதன் அம்பு படம் தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தொடர்பான நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய கமல், மலையாளம் எனக்கு ரொம்ப பிடிக்கும். மீண்டும் மலையாள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன், என்று கூறினார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சை கேட்ட மலையாள திரையுலக பிரமுகர்கள் பலரும் அவரை மலையாள படங்களில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். பிரபல மலையாள தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கோகுலம் பிலிம்ஸ் கோகுலம் கோபாலன் அடுத்து தயாரிக்கவிருக்கும் மெகா பட்ஜெட் படமொன்றில் நடிக்கும்படி கமல்ஹாசனை கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கமல் மீண்டும் மலையாள படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம்.
கமல்ஹாசன் 1989ம் ஆண்டு மலையாள படமொன்றில் நடித்திருக்கிறார். அதன் பிறகு மலையாள படத்தில் கதாநாயகனாக நடித்ததில்லை. தமிழில் உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் கமல், கடந்த ஆண்டு வெளியான ஃபோர் பிரண்ட்ஸ் என்ற மலையாள படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் நாயகனாக நடிக்கப் போகிறார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் நாயகனாக நடிக்கப்போகும் புதிய மலையாள படம் பற்றி மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment