"இது முழுக்க முழுக்க உண்மையே, துளியும் கற்பனை கிடையாது!" என்ற தைரிய அறிவிப்போடு வெளியாகத் தயாராக உள்ள, ஈழ யுத்தத்தையும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளையும் விளக்க முயற்சிக்கும் படமான செங்கடலுக்கு சென்னை சென்சார் குழு தடை விதித்துள்ளது.
ஒரு கரையில் ரத்தம் வடிக்கும் இலங்கைத் தமிழன், மறுகரையில் கண்ணீர் வடிக்கும் தமி்ழக தமிழன், இடைப்பட்ட நீர்ப்பரப்பில் மீன் பிடிக்கப் போய் உயிரை விடும் தமிழ் மீனவன்... இந்த மூன்று சமூகங்களின் துன்பங்களையும் அதற்குக் காரணமான காரணிகளையும் அடிப்படையாக வைத்து செங்கடல் திரைப்படம் தயாராகியுள்ளது.
லீனா மணிமேகலை உருவாக்கியுள்ள இந்தப் படம், விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்போடு தயாராகியுள்ளது. ஆனாலும் இந்தப் படம் புலிகள் மீதான வழக்கமான விமர்சனமாக இல்லாமல், சிங்களப் பேரினவாதம் மற்றும் அதற்கு துணை நிற்கும் சக்திகளால் தமிழர் பட்ட / படும் துயரங்களின் தொகுப்பாக வந்துள்ளது.
விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு அனுமதி கோரி தணிக்கைக் குழுவுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த குழுவினர், உடனே அனுமதி மறுத்துவிட்டதோடு, படத்தை திரையிடவும் தடைவிதித்துள்ளனர்.
காரணம்...?
இந்த படத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரம் லட்சம் என அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து, சர்வதேச அரங்கில் போர்க்குற்றவாளியாக நிற்கும் சிங்கள அரசை விமர்சிப்பது போல வசனங்கள் உள்ளனவாம். சிங்கள இனவாதத்துக்கு தமிழக - இந்திய அரசுகள் துணை நின்றதாக வசனங்கள் சித்தரிக்கின்றனவாம்.
இதனாலேயே அனுமதி மறுப்பதாகக் கூறியுள்ளனர்!

எத்தனை எத்தனை உயிர்களை எடுத்தவனை விமர்சிப்பதே தவறு என்றால், அரக்கன் ராஜபக்சேவை விட சிங்களனின் அராஜக கொடுமையை சொல்ல வந்த படத்திற்கே தடை விதித்த சென்சார் அமைப்பின் உடுப்பினர்களே பெரிய குற்றவாளிகள். கட்டிபிடிப்பது, ஆபாச வசனங்களுக்கும், குடும்பமாக உக்காந்து பார்க்க முடியாத அளவுக்கு காட்சி அமைப்புகள் உள்ள படங்களை வெளிவர வாசலை திறந்து வைக்கும் இந்த ஈனப்பிறவிகள் தான் சென்சார் அமைப்பினரா...? எதை மூடி மறைக்க நினைத்தாலும் கடவுளுக்கு தெரியும் குற்றவாளி யார் என்று .....
No comments:
Post a Comment