புதிய படங்களுக்கு டி.வி.,யில் 10 நிமிடத்துக்கு ஒருமுறை விளம்பரம் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிவாளம் போட்டுள்ளது. இனி நாளொன்றுக்கு 10 முறை மட்டுமே விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான 145 படங்களில் 135 படங்கம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தையை கொடுத்திருக்கிறது; இனி இதுபோல நஷ்டம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விவாதிக்க தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் இராம.நாராயணன் தலைமையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழ் திரையுலகில் கேளிக்கை வரியை முற்றிலும் நீக்கியும், அரசாங்க இடத்தில் படப்பிடிப்பு நடத்த கட்டணங்களை குறைத்தும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்திராத வகையில், தமிழ் திரைப்பட துறையினருக்கு நல வாரியம் அமைத்தும், சென்னை அருகே பையனூரில் வீடுகள் கட்ட இடம் ஒதுக்கியும் சிறப்பு செய்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
* 75 திரையரங்குகளுக்குள் திரையிடப்படும் நேரடி தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டும். அதற்கு மேல் அதிகமாக திரையிடப்படும் படங்களுக்கு கேளிக்கை வரியை விதிக்க வேண்டும் என்று சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள் நலன் கருதி, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இந்த பொதுக்குழு வேண்டுகோள் வைக்கிறது. இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், சிறு முதலீட்டு படங்களை திரையிட திரையரங்குகள் கிடைக்கும். நடிகர்&நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் குறையும்.
* இனிமேல் பெரிய, சிறிய என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைத்து திரைப்படங்களுக்கும், தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்றால், தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே திரையரங்குகள் பொதுமக்களிடம் வசூலிக்க வேண்டும். அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலித்தால், அந்த திரையரங்குகளின் லைசென்சை ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பரிந்துரை செய்யும். இதுபற்றி பொதுமக்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கோ, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துக்கோ, வினியோகஸ்தர்கள் கூட்டமைப்புக்கோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ புகாராக தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் வருடத்துக்கு 36 வாரங்கள் நேரடி தமிழ் படங்களை கட்டாயமாக திரையிட வேண்டும். இதை சட்டமாக்க தமிழக அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
* ஆண்டுதோறும் தமிழக அரசால் சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.7 லட்சம் மானியத்தொகையினை, ரூ.3 லட்சம் சேர்த்து ரூ.10 லட்சமாக உயர்த்தி தருமாறு முதல்&அமைச்சர் கருணாநிதியை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
* நடிகர் - நடிகைகளின் ஊதியத்தில் டப்பிங் வரை 70 சதவீத ஊதியமும், பட வெளியீட்டுக்கு முன்பு 30 சதவீத ஊதியமும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
உதவியாளர்களுக்கான ஊதியம் மற்றும் பேட்டா ஆகியவற்றை நடிகர் - நடிகைகளே கொடுக்க வேண்டும். தயாரிப்பாளரை ஊதியம் மற்றும் பேட்டா தரவேண்டும் என்று நிர்ப்பந்திக்க கூடாது.
* தொலைக்காட்சியில் திரைப்படங்களின் விளம்பரங்கள் அதிக அளவில் பெருகி வருவது குறித்து எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக, அனைவரும் கூடி எடுத்த முடிவின்படி, பத்திரிக்கையில் வரும் விளம்பரங்கள் போல் தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் முறைப்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பிப்ரவரி 1ம்தேதி முதல் காலை 5 முறை, மாலை 5 முறை என 20 வினாடிகள் கொண்ட விளம்பரங்கள் மட்டுமே இனிமேல் தொலைக்காட்சியில் அனுமதிக்கப்படும்.
* பாடல்கள் மற்றும் இசை பற்றிய காப்பி ரைட் பிரச்னை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. அதனை இந்திய அளவில் எல்லா மாநில மொழி திரையுலகினரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அதனால் மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதற்காக பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது.
* மத்திய அரசு கொண்டு வந்துள்ள சேவை வரியால், இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது. அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, திரையுலகை சார்ந்த அனைவரும் ஒன்றாக சேர்ந்து முதல்வர் கருணாநிதியிடம் மனு கொடுப்பது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்பெல்லாம் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக சினிமா விளம்பரங்கள் இடம்பெறும். பெரிய பட்ஜெட் படங்களுக்கு இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடுவதால் பிரச்னை இல்லை. ஆனால் அந்த விளம்பரங்களால் சிறு பட்ஜெட் படங்கள் மக்களுக்கு சென்றடையாமலேயே போகும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து பத்திரிகை விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதுபோல டி.வி., விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று சமீப காலமாகவே கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இப்படி விளம்பரங்கள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல படங்கள் சென்றடையாமல் போய் விடுகின்றன என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, டி.வி., விளம்பரங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த முடிவு நிமிடத்திற்கு ஒரு முறை தனது தயாரிப்பில் வெளிவரும் படங்களின் விளம்பரங்களை போடும் சன் குழுமத்தின் செயலுக்கு எதிராக எடுக்க பட்டதாகவே கருதப்படுகிறது. எது எப்படியோ இந்த முறை நடைமுறைக்கு வந்தால் கொஞ்சம் நிம்மதியாக டிவி பார்க்கலாம் ....
சன் டிவி க்கு ஆப்பு அல்ல !
ReplyDeleteFULL !