ஒருவழியாக எல்லா பிரச்சனைகளையும் கடந்து "காவலன்" படத்தை ரிலீஸ் செய்துவிட்டார் விஜய். எதிர்ப்புகளை கடந்து படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எப்படியோ பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று நிம்மதி பெருமூச்சுவிட்டநிலையில் இன்னொரு பிரச்சனை உருவாகிவிட்டது. இப்போது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பிரச்சனை உருவாகியுள்ளது.
"சட்டப்படி குற்றம்" என்ற படத்தை இயக்கி வருகிறார் டைரக்டர் சந்திரசேகர். இந்தபடம் இவரது முந்தைய படமான "சட்டம் ஒரு இருட்டறை" படத்தின் ரீமேக் ஆகும். சமீபத்தில் இந்த படத்திற்கான சூட்டிங் சத்தியமங்கலம் காட்டு பகுதியில் முறையான அனுமதியுடன் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று படத்தை நடத்த விடமால் முற்றுக்கட்டை போட்டுள்ளது. நீங்கள் படப்பிடிப்பு நடத்தும் இந்த பகுதி ரிசர்வ் பகுதி என்றும், இங்கு சூட்டிங் நடத்தினால் காட்டில் வாழும் புலி, யானை போன்ற மிருகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி சூட்டிங்கை நடத்தவிடாமல் செய்துள்ளது.
முறையான அனுமதி பெற்று நடந்த சூட்டிங்கை இப்போது ரிசர்வ் பகுதி என்று கூறி சூட்டிங்கை நடத்தவிடாமல் பண்ணியிருப்பது எஸ்.ஏ.சி.யை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment