அஜித்தின் 50வது படமாக மங்காத்தா அமைந்தாலும் அமைந்தது அதன் உள்ளே வெளியே ஆட்டம் விதவிதமாகத்தான் இருக்கு.
அஜித், அர்ஜூன், பிரேம்ஜி அமரன், கணேஷ் வெங்கட்ராமன், லட்சுமிராய் இன்னும் மிகப் பெரிய நடிகர் பட்டாளம் சேர்ந்து ஆடும் ஆட்டம்தான் ‘மங்காத்தா’ . இந்த ஆட்டத்தில் இருந்த நீது சந்திரா தற்போது ஆட்டத்திலிருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார். நீதுவின் ஹீரோயின் நாற்காலி காலிசெய்யப்பட்டு திரிஷாவுக்கு கொடுக்கும் வேலை நடந்து வருகிறது.
கிரிட்கெட்டில் பாகிஸ்தான் வீரர்கள் ஆடிய மேட்ஸ் பிக்ஸிங் சூதாட்டத்தில் நீது சந்திராவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேக விசாரணையின் தாக்கம்தான் அவரை மங்காத்தா ஆட்டத்திலிருந்து நீக்கிவிட்டது. இதனால் உள்ளே திரிஷா... வெளியே நீது சந்திரா.
மங்காத்தாவில் சிம்பு கெஸ்ட் ரோலில் வருகிறார். அஜித் ரசிகன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் சிம்பு சிலம்பாட்டத்தில் பில்லா அஜித் கெட்டப்பில் வந்து கலக்குவார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என வெங்கட் பிரபு கேட்டவுடன் சம்மதம் தெரிவித்துவிட்டார் சிம்பு. ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய ‘கோவா’ படத்தில் கிளைமாக்ஸில் மன்மதன் சிம்புவாக தோன்றுவார். அதே போல் இந்தப் படத்தில் அஜித்துடன் ஒரு காட்சியில் சேர்ந்து நடிக்கிறார்.
இந்தப் படம் தமிழ் தெலுங்கு என்று இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கபடுகிறது. தெலுங்கு மங்காத்தாவில் ஹீரோ அர்ஜூன் தமிழில் அர்ஜூன் நடிக்கும் கதாபாத்திரத்தில், தெலுங்கில் அஜித் நடிக்கிறாராம்.
இப்படியான விஷயங்களுக்கு மத்தியில் இப்போது புதுசா ஒரு சுவாரசியம் மங்காத்தா ஆட்டத்தில் சேர்க்கப்படுகிறது...
மங்காத்தா படபூஜையே போட்டோ ஷூட்டுடன்தான் தொடங்கப்பட்டது. அப்போதே டிரெய்லரையும் தயாரித்து படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே திரையிட்டு, ரசிகர்களுக்கு சுவையான மினி மீல்ஸ் விருந்தை கொடுத்துவிட்டது மங்காத்தா டீம்.
டிரெய்லரில் அஜித்தின் ‘கெட்டப்’ புதுமையான ஸ்டைலாக அமைந்து ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான தாக்கத்தை அதிகரித்துவிட்டது. (பின்ன இருக்காதா என்ன... கடுமையான உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக மெருகேற்றியல்லவா வருகிறார் அஜித்.)
இந்தப் படத்தை எப்படியாவது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியான ஒரு ஹிட் படமாக்கிவிடவேண்டும் என்பதுதான் அஜித் மற்றும் வெங்கட் பிரபுவின் மிகப்பெரிய ஆசை. இதற்காக பலவாறு யோசித்து செயல்பட்டுவருகிறார்கள்.
அப்படியான பலத்த யோசனைகளால் வெங்கட் பிரபு எடுத்திருக்கும் திடீர் முடிவு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவதாகும்.
அஜித்தின் 50வது படம் என்பதால் இந்தப் படம் மிகவும் புதுமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் வெங்கட்.
அஜித்தின் 50வது படம் என்பதால் இந்தப் படம் மிகவும் புதுமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் வெங்கட்.
ரொம்பவும் மாறுபட்டதாக எடுத்திடலாம். ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்க என்ன செய்ய வேண்டும்...? இந்தக் கேள்வியை ரசிகர்களிடமே வைத்தால் என்ன... என்ற யோசனை வெங்கட் பிரபுவுக்கு ஏற்பட்டுள்ளது.
ரசிகள் கூறும் நிறை குறைகளையும், கருத்துக்களையும், விருபங்களையும் சேகரித்து அதன் அடிப்படையில் மங்காத்தாவின் திரைக்கதையை சிறப்பானதாக்கலாம் என்பதுதான் வெங்கட் பிரபுவின் விருப்பமாம். இந்த யோசனை அஜித்துக்கும் பிடித்துப்போக, தற்போது ரசிகர்கள் ஆலோசனைக் குழுவை அமைக்கும் பணி சூடுபிடித்துவிட்டது.
ரசிகர்களை நேருக்கு நேர் சந்தித்து, அவர்கள் கற்பனையில் இருக்கும் அஜித் படம் எப்படிப்பட்டது என்று அறிந்திட வெங்கட்பிரபு ரெடி... ரசிகர்கள் ரெடியா...?
‘தல’ அழைத்த பிறகும் தாமதமா என்ன...
No comments:
Post a Comment