இப்போதே உரிமையாக, காதலரின் வீட்டில் இருக்கிறார் கீதாஞ்சலி. தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள். செல்வராகவனின் வருங்கால மனைவி.
இவர் அண்மையில் வாரஇதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கீதாஞ்சலி பேசியது எல்லாமே செல்வா மீதான காதல்... காதல்... காதல்!
''நான் சென்னைப் பொண்ணுதான். பிரிட்டனில் புரொடெக்ஷன் மேனேஜ் மென்ட் படிச்சுட்டு வந்தேன். அந்தச் சமயம் செல்வா கம்பெனிக்கு இணைத் தயாரிப்பாளர் வேணும்னு கூப்பிட்டாங்க. செல்வாவைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி நிறையப் பயமுறுத்தினாங்க. 'அவர் ரொம்ப ரிசர்வ்டு டைப்’, 'அவர்கிட்டே வேலை செய்யுறது ரொம்பக் கஷ்டம்’னு சொன்னாங்க. ஆனால், முதல் சந்திப்பிலேயே அது எதுவும் நிஜம் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன். ரெண்டு மணி நேரம் கலகலன்னு பேசினார் செல்வா. செல்வா மிக வெளிப்படையானவர். அவரோட எல்லா வேலைகளையும் நான் பார்த்துக்கிட்டேன். அதனால், அவரால் ஸ்க்ரிப்ட்டில் முழுமையா ஈடுபட முடிந்தது. அவருக்குக் கிடைச்ச அந்த சுதந்திரம்தான், என் மேல் அவருக்கு அன்பு வரக் காரணமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.
ஆனா, எனக்கு அவர்கிட்டே பழகின சில நாட்களிலேயே அன்பு வந்திருச்சு. அவருக்குப் பிடிச்ச விஷயங்களைத் தேடித் தேடித் தந்தேன். எனக்கு அவரைப் பிடிச்சிருக்குன்னு அவரும் புரிஞ்சுக்கிட்டார். என் மேல் அக்கறை காட்ட ஆரம்பிச்சார். செல்வா ரொம்ப நம்பிக்கை
வெச்சாதான், அவரோட பெர்சனல் விஷயங்களை ஷேர் பண்ணுவார். அப்படிச் சில விஷயங்களை என்னிடம் சொன்னார்.
வெச்சாதான், அவரோட பெர்சனல் விஷயங்களை ஷேர் பண்ணுவார். அப்படிச் சில விஷயங்களை என்னிடம் சொன்னார்.
ரெண்டு பேருமே அன்பை அப்பப்போ குறிப்பால் வெளிப்படுத்திட்டே இருந்திருக்கோம். அது... அப்போ புரியலை. இப்போ யோசிச்சுப்பார்க்கும்போது, ஆச்சர்யமா இருக்கு.
ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சது எப்போன்னு ரெண்டு பேருக்குமே தெரியாது. எங்களுக்கே தெரியாமல் நடந்திருக்கு. அவர் என் வீட்டுக்கு வந்தார். என் வீட்டில் எல்லோ ருக்கும் அவரைப் பிடிச்சிருந்தது. நானும் அவர் வீட்டுக்குப் போய் வர ஆரம்பிச்சேன்.
தனுஷ§க்கு ஏதோ தோணி இருக்கணும்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னைப் பார்த்ததுமே, 'எங்க அண்ணாவைக் கல்யாணம் பண்ணிக்கோங்க’ன்னு கிண்டல் அடிக்க ஆரம்பிச்சார். நான் 'ஐயையோ’ன்னு இடத்தைக் காலி பண்ணிட்டு ஓடிருவேன். ஒருநாள் நானும் செல்வாவும் அவரோட அம்மா விஜயலட்சுமியின் காலில் விழுந்தோம். 'சந்தோஷமா இரும்மா! என் பையனைச் சந்தோஷமா வெச்சிரும்மா!’ன்னு ஆசீர்வாதம் பண்ணினாங்க. அடுத்து என் அம்மா விடம் தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னேன். 'அதுதான் உங்க ரெண்டு பேர் முகத்தைப் பார்த்தாலே தெரியுதே!’ன்னு சிரிச்சாங்க. 'அப்பாகிட்டே சொல்லத் தயக்கமா இருக்கு... நீயே சொல்லி டேன்’னு சொன்னேன். 'அட, நீ வேற... அவ செல்வாவைத்தான் கட்டிக்கப் போறா பாரேன்’னு எப்பவோ சொல்லிட்டார் உன் அப்பா. அதனால, நீயே அப்பாகிட்ட சொல்லிடு’ன்னாங்க. சிம்பிளா சிரிச்சுத் தன் சம்மதத்தைத் தெரிவிச்சார் அப்பா.

செல்வா என்னை 'பம்பி’ன்னு செல்லமாக் கூப்பிடுவார். ரொம்ப ஜாலி மூடில் இருந்தால், 'கீட்ஸ்’. ரஜினி சாருக்கு விஷயம் தெரிஞ்சதும், நேரா கிளம்பி வந்துட்டார். 'செல்வா, அருமை யான பையன். நம்பி உங்க பொண்ணை அனுப்பலாம். ரெண்டு பேருமே சந்தோஷமா இருப்பாங்க’ன்னு அப்பாகிட்ட நம்பிக்கையாப் பேசினார். நாங்க கல்யாணம் பண்ணிக்கப்போறோம்னு தெரிஞ்சதும், எனக்கு வந்த முதல் வாழ்த்து, சோனியாகிட்ட இருந்து வந்த எஸ்.எம்.எஸ் - தான்.
இப்போதைக்கு செல்வாவுக்கு நிம்மதியான வாழ்க்கை தேவை. அதைக் கொடுப்பதுதான் என்னுடைய உடனடி வேலை. சினிமா வேலைகள் எல்லாமே அப்புறம்தான்!'' மலர்ந்து சிரிக்கிறார் கீதாஞ்சலி!
No comments:
Post a Comment