மோசடி புகார் தொடர்பான வழக்கில், நடிகையும், ஆந்திர எம்.பி.,யுமான விஜயசாந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த இந்தர்சந்த் ஜெயின் என்பவர் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: ஐதராபாத்தை சேர்ந்த விஜயசாந்தி (தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி.,) என்னை அணுகினார். சென்னையைச் சேர்ந்த சங்கர்ராவ், ஆனந்த், சுந்தர் பிரகாஷ் ஆகியோரின் சொத்துக்களுக்கு பவர் ஆப் அட்டர்னி பெற்றுள்ளதாகவும், தி.நகரில் எட்டு கிரவுண்ட் நிலம் மற்றும் கட்டடத்துடன் கூடிய சொத்தை விற்க உரிமையுள்ளது என, விஜயசாந்தி கூறினார். இதையடுத்து, இரண்டு கிரவுண்ட் நிலத்தை ஐந்து கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு வாங்க நான் ஒப்பந்தம் மேற்கொண்டேன். 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
விஜயசாந்தியிடம் நான்கு கோடியே 68 லட்சம் ரூபாய் கொடுத்தேன். விற்பனை பத்திரம் பதிவு செய்யும் தினத்தன்று, மீதித் தொகையை கொடுக்க வேண்டும். அசல் பத்திரங்களை என்னிடம் விஜயசாந்தி அளித்தார். விற்பனை பத்திரம் பதிவு செய்வதற்காக விஜயசாந்தியை அழைத்த போது, அவர் தவிர்த்தார். அவரது நடவடிக்கை சந்தேகத்துக்குரியதாக இருந்தது. எனவே, வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். அப்போது தான், இந்த நிலத்தை வேறொருவருக்கும் விஜயசாந்தி விற்பனை செய்தது தெரிய வந்தது. என்னை மோசடி செய்துள்ளார். விஜயசாந்திக்கு நோட்டீஸ் அனுப்பினேன். பதில் இல்லை. எனது புகாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனருக்கு அனுப்பி, விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த ஜார்ஜ்டவுன் கோர்ட் மாஜிஸ்திரேட், ஆரம்ப முகாந்திரமில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இந்தர்சந்த் ஜெயின் மனு தாக்கல் செய்தார். அதில், "மோசடி பரிவர்த்தனைக்கான அம்சங்களை பரிசீலிக்காமல், முகாந்திரமில்லை என தவறான முடிவுக்கு மாஜிஸ்திரேட் வந்துள்ளார். எனவே, எனது புகாரை பதிவு செய்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். மனுவை நீதிபதி பாஷா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் யு.எம்.ரவிச்சந்திரன் வாதாடினார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி விஜயசாந்தி உள்ளிட்ட ஆறு பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி பாஷா உத்தரவிட்டார். விசாரணையை வரும் 19ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

அரசியலுக்கு வந்தாலே மோசடி செய்ய தானா வருமோ?
No comments:
Post a Comment