ஜெர்மனியை சேர்ந்தவர் கரோலின் வாஷ்னிட்ஷா (23). “செக்ஸ்” நடிகை. இவர் நிர்வாண படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் இவர் தனது மார்பகத்தை செயற்கை முறையில் அழகு படுத்த ஆபரேஷன் செய்து வந்தார். ஏற்கனவே 5 தடவை ஆபரேஷன் செய்த இவர், கடந்த வாரம் 6-வது முறையாக ஆபரேஷன் செய்து கொண்டார்.
இந்த ஆபரேஷன் ஜெர்மனி ஹேம் பர்க் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நடந்தது. மார்பகங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைய அவருக்கு சிலிகான் ஊசி மருந்து செலுத்தப்பட்டது. பின்னர் மயக்க மருந்தும் கொடுக்கப்பட்டு ஆபரேஷன் நடந்தது. அப்போது அவரது இதய துடிப்பு நின்றது. அதை தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் பலனின்றி 9 நாட்களுக்கு பிறகு அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து அவருக்கு பிளாஸ் டிக் சர்ஜரி செய்த டாக்டர் மற்றும் மயக்க மருந்து நிபுணர் ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவரது பிரேத பரிசோதனை அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளது. மரணம் அடைந்த நடிகை கரோலின் கடந்த ஆண்டு நடைபெற்ற “பிக்பாஸ்” என்ற டெலிவிஷன் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அப்போது மேலாடை அணியாமல் அரை நிர்வாணத்துடன் உலாவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து அவர் பிரபலமானார்.
No comments:
Post a Comment