எண்பதுகளில் வெளியான 'டான்' இன்று கிட்டத்தட்ட 5 முறை திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டுவிட்டது. அனைத்தும் வெற்றிதான்.
அமிதாப் நடித்த ஒரிஜினல் டான் படத்தை தமிழில் ரஜினியை வைத்து பில்லாவாக எடுத்தனர். படம் பிளாக்பஸ்டர். ரஜினியின் கேரியர் உச்சத்துக்குப் போனது இந்தப் படத்தில். அடுத்து இதே படம் தெலுங்குக்குப் போனது. அங்கும் ஹிட்.
பல ஆண்டுகள் கழித்து, பழைய டான் படத்தை, ஷாரூக்கை வைத்து புதிதாக எடுத்தனர். படம் சூப்பர் ஹிட்.
தமிழில் பில்லாவை அஜீத்தை வைத்து எடுத்தனர். சரிந்து கிடந்த அஜீத் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது அந்தப் படம்.
இந்தப் படம் தெலுங்கிலும் பில்லா என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. அங்கும் பெரிய வெற்றி.
இப்போது அடுத்த ரவுண்ட் ஆட்டம் ரெடி. டான் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷாரூக்கை வைத்து இந்தியில் எடுக்கிறார்கள். இந்தப் படத்தில் நீண்ட தலைமுடியுடன் மிக வித்தியாசமாகக் காணப்படுகிறார் ஷாரூக்கான். அவருக்கு ஜோடி ப்ரியங்கா சோப்ரா மற்றும் லாரா தத்தா.
பர்ஹான் அக்தர் இயக்கும் இந்தப் படத்தின் பெரும்பகுதி ஐரோப்பாவில் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழிலும் அஜீத்தை வைத்து பில்லா -2 எடுப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

No comments:
Post a Comment