சங்கர் தனது மனைவி ஜெகதீஸ்வரி குழந்தையோடு கோட்டூர்புரத்திற்கு சென்று ஒரு ஓலை குடிசை வீடில் குடியேறினார்கள். அவர்கள் அன்றிருந்த நிலைமைக்கு மாடமாளிகையிலா குடியேற முடியும். அவர்களுக்கு இதுவே மேல் போன்று தான் இருந்தது.
ஒரு சிறிய ஓலை குடிசை. சுத்தி வெள்ளக்காடு, கும்மிருட்டு! வயித்தில ஒரு வார பசி! திரும்ப ஆரம்ப நிலைமை! இதை தான் எந்த பயணமும் இறுதியில் துவங்கிய ஆரம்ப இடத்திற்கே செல்லும் என்று சொல்வாங்களோ!
அப்போதாவது புருஷன் பொஞ்சாதி ரெண்டு பேர் மட்டும் தான் பட்டிணி கிடந்தாங்க. பெரியவங்க தானே எப்படியாவது சமாளிச்சுக்கலாம், சமாளிச்சாங்க தண்ணீரும் , கண்ணீருமா! ஆனா, இப்போ கையிலே ஒரு குழந்தை, ஜெகதீஸ்வரி வயித்துக்குள்ளே ஒரு குழந்தை.
சிறிது நாட்கள் எப்படியோ இருந்த காசை வைத்தும் அப்புறம் கடையில் கடன் வைத்தும் வாழ்க்கையை ஓட்டியாச்சு! ஆனால், இப்போது மொத்த குடும்பமும் சாபிட்டு ரெண்டு நாளா பட்டிணி.
குழந்தை கீதா (சங்கர் குழந்தை பேரு ) பால் கேட்டு அழுதது. ஜெகதி சாபிட்டால் தானே குழந்தைக்கு கொடுக்க பால் சுரக்கும்.?
குழந்தையோட பசி தீர்க்க வகை தெரியாம ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பார்த்து அழுதார்கள்! வெளியே போய் பிச்சையாவது எடுத்துட்டு வந்து குழந்தை குட்டிகளுக்கு சோறு போடா மாட்டோமான்னு சங்கருக்கு வெறி வந்துச்சு.
"ஜெகதி ...வேறு வழி இல்லம்மா ... நான் வெளிய போய் பிச்சை எடுதிட்டாவது வரட்டுமா..! எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருக்கிறது. முன்னாடின்னா நாம ரெண்டு பேரு மட்டும் தான் சமாளிச்சிட்டோம். இப்போ அப்படியா ...! வேலைக்கு எல்லாம் இப்போதைக்கு போக முடியாது மாதிரித்தான் தெரியுது. இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி குழந்தை பசியோட அழுறதையும் பார்த்திட்டு இருக்கிறது. நான் பிச்சை எடுத்திட்டு வரேன் ஜெகதி...."-சங்கர்.
"அப்படி எதுவும் செய்துடாதீங்க! அப்புறம் வீட்டை காலி பண்ண சொல்லிடுவாங்க...ஏற்கனவே ரெண்டு மாச வாடகை பாக்கின்னு கத்துறாங்க! இதை வேற செய்தோம்ன்னா....'பிச்சைகாரங்களுக்கெல்லாம் வீடு கிடையாது'ன்னு விரட்டிடுவாங்க" ஜெகதி பலவீனமாக கெஞ்சினாள். மூச்சு முட்டிடுச்சு. கிட்டத்தட்ட அரை மயக்கத்தில் இருந்தாள்.
"ஜெகதி என்னாச்சும்மா"ன்னு கலங்கினான் சங்கர்.
குழந்தை வேற பால் கேட்டு பயங்கரமாக கத்தியது.
"வயிறு ஒரு மாதிரியா பெரட்டுதுங்க. வயித்துகுள்ளார இருக்கிற குழந்தை என்னாகுமோ தெரியல்ல. மயக்கமா வருது....பசி தாங்க முடியல்லங்க" குமுறினாள் ஜெகதீஸ்வரி.
அந்த நிலைமையில் தனது காதல் மனைவியை பார்த்ததும் சங்கரால் தாங்கி கொள்ள முடியவில்லை.
"ஜெகதி இரும்மா....இப்ப வரேன் ....கொஞ்சம் பொறுத்துக்க"ன்னு சொல்லி விட்டு வெளியே ஓடுகிறான் சங்கர்.
இன்னமும் மழை கொட்டிகிட்டே இருந்தது.
கிழிந்த கோணியை தலையிலே போர்த்திகிட்டு நாடார் கடைக்கு ஓடினான்.
ஏற்கனவே அங்கே போன வாரம் வாங்கின கால் கிலோ அரிசிக்கு இன்னும் காசு கொடுக்கல்ல. அதற்கே போறப்ப வாரப்ப திட்டிகிட்டிருக்காரு அந்த கடைக்காரர். அவரு திருநெல்வேலிகாரர்.
வேறு வழி இல்லாமல் சங்கர் அவர் எதிரே போய் நின்றான். குளிர்ல நடுங்கினானோ இல்லையோ பயத்துல நடுங்கினான்.
"அண்ணாச்சி...ஒரு கிலோ அரிசி கடன் தாங்க! வேலைக்கிப் போனதும் கொடுக்...."சங்கர் பேசி முடிக்கவே இல்லை அவர் கோபப் பார்வை பார்த்திட்டு குலை நடிக்கமாகிற அளவுக்கு கத்தினார்.

No comments:
Post a Comment