மாணவியான நாயகி
சிந்து சமவெளி, மைனா படங்கள் மூலம் பிரபலமான அமலாபால் படிப்பு பாதியில் நிறுத்தி விட்டு வந்தவர். தற்போது மீண்டும் கல்லூரியில் சேர்ந்து வகுப்புக்கு போகிறார். பட்டம் வாங்கிய பிறகே முழு வீச்சில் நடிப்பேன் என்கிறார்.
சரத்குமாரின் மலையாள படங்கள்
பழசிராஜாவுக்கு பின் மலையாளத்தில் பிசியாகி விட்டார். சரத்குமார் பட வாய்ப்புகள் குவிகின்றன. ஏற்கனவே மூன்று படங்களில் நடித்து வந்தார். தற்போது நான்காவது பட வாய்ப்பும் வந்துள்ளது.
தெலுங்கில் மலையாள நாயகிகள்
மலையாள நாயகிகள் தமிழ் படங்களில் ஆதிக்கம் செலுத்தினர். இப்போது தெலுங்கிலும் சாதிக்கிறார்கள். நயன்தாரா, அசின் போன்றோர் தெலுங்கில் நடித்தனர். புதிதாக ரம்யா நம்பீசன், ஓவியா போன்றோருக்கும் தெலுங்கு படங்கள் வந்துள்ளன.
புது வீடு
வெங்கட் பிரபு பெசன்ட்நகரில் கடற்கரையை பார்த்து உள்ள பெரிய பங்களா வீட்டில் குடியேறியுள்ளார். யுவன் சங்கர் ராஜா, அண்ணாமலைபுரத்தில் வீடு பிடித்து தனியாக வசிக்கிறார். இயக்குனர் தங்கர்பச்சான் வடபழனி பஸ் நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பில் கூடுதல் விலை கொடுத்து பிளாட் வாங்கியுள்ளார்.
புது நாயகி
இது கதல் உதிரும் காதல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுக மாகியுள்ளார் அகிலா. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். படிப்பில் ஆர்வம் இல்லாமல் நடிக்க வந்துவிட்டாராம். தற்போது குமரன் இயக்கும் ஒருபொண்ணு நெனச்சா படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.





No comments:
Post a Comment