அதிரி புதிரியான அழகிருந்தால் பதறி ஓடுகிற அளவுக்கு வாய்ப்புகள் வரும் என்பதற்கு டாப்ஸியே சிறந்த உதாரணம். நாலு படங்கள் ஹிட்டானால் போதும். மும்பைக்கு பிளைட் ஏற்றி விட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள் ரசிகர்கள். அப்படி ஒரு வாய்ப்பை முதல் படத்திலேயே பெற்றுவிட்டார் டாப்ஸி. ஆடுகளம் படத்திற்கு பின் பாலிவுட் படமான 'புத்தா' படத்தில் நடிக்க அழைப்பு வந்தது அவருக்கு. இப்படத்தில் அமிதாப்புடன் சேர்ந்து நடிக்கக் கூடிய பாக்கியம் இருந்தும், கால்ஷீட் பிரச்சனையால் வேண்டாம் என்று மறுத்து விட்டார் டாப்ஸி.
அப்புறம் தெலுங்கு படங்கள் சிலவற்றிலும், தமிழில் 'வந்தான் வென்றான்' படத்திலும் நடித்துக் கொண்டிருந்தவருக்கு மீண்டும் வந்திருக்கிறது பாலிவுட் வாய்ப்பு. மும்பையிலிருக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான டேவிட் டவான் என்பவர்தான் டாப்ஸியை அழைத்திருக்கிறாராம். முழு நீள காமெடி படம் என்பதாலும், பெரிய இயக்குனர் என்பதாலும் ஓ.கே சொல்லியிருக்கிறார் டாப்ஸி.
அட... எந்த படத்திலாவது நடிச்சுட்டு போகட்டும். டாப்ஸியோட டாப் சீக்ரெட் ஏதாவது இருந்தா சொல்லுங்க என்று கேட்பதுதானே ரசிகர்களின் இயல்பு. இதோ- சந்தோஷமா படிச்சு சைலண்ட்டா சிரிச்சுட்டு போங்க. மங்காத்தா படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் ஒருவருக்கும் டாப்ஸிக்கும் ஒரே இதுவாம். (சத்தியமா தல இல்லீங்க) சென்னைக்கு வரும்போதேல்லாம் இந்த இளம் நடிகர்தான் ஏர்போர்ட்டில் டாப்ஸியை பிக்கப் பண்ணுகிறார். சாயங்கால பார்ட்டிகளுக்கும் இருவரும்தான் சேர்ந்து செல்கிறார்கள்.
நடிகைகளோட காதலுக்கு 'நீர்க்குமிழி' வயசுதான்ங்கிறது அந்த பெரிய இடத்து பையனுக்கு புரிஞ்சா சந்தோஷம்!

No comments:
Post a Comment