எம்.ஜி.ஆரின் 94-வது பிறந்த நாள் விழாவையும் அவரது கலையுலக பவள விழாவையும் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ரசிகர்கள் கொண்டாடினர். வழி நெடுக எம்.ஜி.ஆர். கட்அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இவ்விழாவில் கூடினர்.
எம்.ஜி.ஆர் கட்அவுட்களுக்கு அவர்கள் மாலைகள் அணிவித்தனர். தீபாராதனையும் காட்டினர். இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரங்கில் எம்.ஜி.ஆரின் அபூர்வ உருவப்படங்கள் அடங்கிய கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது. விழா மேடையில் பாலு அன்ட் பாலு இசைக்குழுவினர் எம்.ஜி.ஆரின் திரைப்பட பாடல்களை பாடினர்.
சிறப்பு விருந்தினர்களாக பழைய நடிகைகள் ராஜஸ்ரீ, சி.ஐ.டி சகுந்தலா, எம்.பானுமதி, எஸ்.எம். பானுமதி, திருடாதே லட்சுமி, கவிஞர் கண்ணதாசன் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றனர். மேடையில் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கவிஞர் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், எம்.ஜி. சக்கரபாணி பேரன் எம்.ஜி.சி.பிரதீப், பி.எஸ். ராஜு ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், புதுவை, மலேசியா, சிங்கப்பூரில் இருந்தும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வந்திருந்தனர்
No comments:
Post a Comment